WATER TIPS TO REDUCE SUMMER HEAT: கோடை வெப்பத்தை தவிர்க்க தண்ணீர் டிப்ஸ்

1
390
WATER TIPS TO REDUCE SUMMER HEAT 4

WATER TIPS TO REDUCE SUMMER HEAT: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் கோடை வெப்பத்தை தவிர்க்க தண்ணீர் டிப்ஸ் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலை குளிர்ச்சியாக்க முடியும்

WATER TIPS TO REDUCE SUMMER HEAT: கோடை காலத்தையும், கோடை கால நோய்களைத் தவிர்க்கவும், தினமும் 3 லிட்டர் முதல் 5 லிட்டர் வரை சுகாதாரமான தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், ஜூஸ், மோர், எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.

கோடையை சமாளிக்கவே இயற்கை அளித்த வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன் கோடைகாலத்தில் பல நோய்களுக்கும் மருந்தாகிறது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான் முழுமையான பலனைத்தரும்.

WATER TIPS TO REDUCE SUMMER HEAT 1

கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க, அதிக அளவில் வியர்வை வெளியேறும். அதனால், அதற்கேற்ப தண்ணீர் அருந்த வேண்டும். இந்த நீரை பருகலாமா?

கார்பனேற்றப்பட்ட பானங்கள், மது பானங்கள் போன்றவை கெட்டுப்போகாமல் இருக்க விதமான வண்ணங்கள் மற்றும் சர்க்கரைகளை சேர்க்கின்றனர். அதனை பருகுவதன் மூலம் அமிலத்தன்மை நீர்ப்பெருக்கியாக செயல்பட்டு சிறுநீர் மூலமாக இழப்பை ஏற்படுத்தும்.

மேலும் பற்கள், சிறுநீரக கற்கள், கீல்வாதம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

அதிக அளவு பணம் கொடுத்து வாங்கும் இரசாயன குளிர்பானங்கள், எனர்ஜிடிக் பானங்கள் உடலுக்கு எந்த விதத்திலும் நல்லதல்ல. பணம் நஷ்டம் மட்டும் அல்லாமல், நாமே பணம் செலவு செய்து நம் உடலுக்கு தீமைகளை வாங்குகிறோம். எனவே, இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

மேலும், அதிக அளவு டீ, காபி குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

WATER TIPS TO REDUCE SUMMER HEAT 2

அதிக அளவு குளிரூட்டப்பட்ட பானங்கள்

WATER TIPS TO REDUCE SUMMER HEAT: கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ச்சியுடன் தான் இருக்க விரும்புவார்கள்.

உடல் புழுக்கமான சூழ்நிலையில் குளிர்ந்த திரவங்களை உட்கொள்வதன் மூலம் தோல் இரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டு வெப்ப இழப்பை ஏற்படுத்தும். எனவே, மிகுந்த குளிரூட்டப்பட்ட பானங்களை தவிர்ப்பது நலம்.

WATER TIPS TO REDUCE SUMMER HEAT 3

குறைவான தண்ணீர் குடிப்பதால் வரும் நோய்கள்

WATER TIPS TO REDUCE SUMMER HEAT: அவரவர் வேலை மற்றும் அவர்களின் உடலின் வியர்வைக்கேற்ப தண்ணீரின் தேவை மாறுபடும். உடல் உழைப்பு அதிகமானவர்கள் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடலில் நீர்ச்சத்து குறையும் பட்சத்தில் மாலையில் களைப்பு, உடல்வலி, நீர்க்கடுப்பு, காலையில் மலச்சிக்கல், நாள்பட சிறுநீர்ப் பாதை கல், மூலம், வயதானோர்க்கு வெக்கையினால் ஏற்படும் மயக்கம் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

உதடுகள் காய்ந்துபோவது, நாக்கு வறட்சி அடைவது, அடிக்கடி தாகம் எடுப்பது, எப்போதும் தூக்கம் வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

தற்போது கேன் வாட்டர் பரவலாக பயன்பாட்டில் உள்ள நிலையில், அதன் தரத்தைப் பார்த்து வாங்கிப் பயன்படுத்துவதே நலம். கேனில் ஐஎஸ்ஐ முத்திரைக் குத்தப்பட்டு இருந்தால் மட்டுமே சுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது.

வெயில்கால பாதிப்புகள் பெரியவர்களை விட, குழந்தைகளுக்கு தான் எளிதில் தொற்றும். அதிக உஷ்ணம் காரணமாக, அம்மை, வியர்க்குரு தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றைத் தவிர்க்க தினந்தோறும் இருமுறை குளிப்பது நலம்.

வெளியில் செல்லும் போது, கண்டிப்பாக கை பையில் எப்போதும் சிறிய பாட்டிலில் தண்ணீர் வைத்து கொள்ள வேண்டும்.