MOMOS HISTORY IN TAMIL 2023: பிரபலமான மோமோஸ் உணவு இப்போது எல்லை தாண்டி பல நாடுகளுக்கும் பரவி உலக மக்களின் பிடித்தமான உணவுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. காய்கறி, சிக்கன், மட்டன், என பல வகை இறைச்சிகளை கோதுமை/மைதா மாவில் வைத்து ஆவியில் வேகவைத்து சமைக்கப்படுகிறது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, மோமோ ஸ்டால்கள் அதிகம் இல்லை, ஆனால் இப்போது நீங்கள் மோமோ ஸ்டால்கல் இல்லாத தெருவே இல்லை என்பது போல மாறிவிட்டது. ஆனால், மோமோஸ் சரியாக எங்கிருந்து வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
மோமோஸின் வரலாறு என்ன மற்றும் அவை எவ்வாறு இந்தியாவிற்கு வந்தன என்பதைப் பற்றிய சுளுவார்ஸ்ய கதைகளை தான் இந்த செய்தித் தொகுப்பில் உங்களுக்கு சொல்ல இருக்கிறோம். ருசித்து சாப்பிடும் பண்டத்தின் வரலாறை தெரிந்து கொள்வது முக்கியம்தானே?
மோமோஸின் வரலாறு
MOMOS HISTORY IN TAMIL 2023: நம்பிக்கைகளின்படி, மோமோஸ் 14 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. நேபாளம் மற்றும் திபெத் ஆகிய இரண்டும் மோமோஸின் பிறப்பிடமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
நேபாள நாட்டில் உள்ள நெவார் இனத்தை சேர்ந்தவர்கள், நேபாள நாட்டில் வணிகம் செய்து வந்தனர். அப்படி, வணிகத்திற்காக திபெத்துக்கு அதிகம் வருகை தந்தனர்.
அந்த பயணங்களின் போது புதிய இடத்தில் இந்த காய்கறி/ கறியை பொட்டலங்கள் போன்று செய்து சமைத்து செய்து சாப்பிடும் செய்முறையை கண்டுபிடித்தனர். நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள நெவார் சமூகத்தினரிடையே இந்த உணவு ஆரம்பத்தில் பிரபலமாக இருந்தது. திபெத்தில் அது கொஞ்சம் மாறுபட்டு உள்ளே வைக்கும் பூரணம், யாக் எனும் மாட்டிறைச்சி/ உருளைக்கிழங்கு/ பாலாடை கட்டி நிரம்பியாக இருந்தது.
பயணத்தின் போது எளிதாக எடுத்துச்செல்லவும், சாப்பிடவும் எளிதாக இருக்கும் இந்த உணவு திபெத் , நேபாளத்தில் இருந்த உணவு முறை கொஞ்சம் கொஞ்சமாக எல்லை பக்கம் வந்து இந்தியாவிற்குள் நுழைந்தது. இந்தியாவில் மோமோஸ் எப்படி நுழைந்தது என்ற கதையையும் சொல்கிறோம்.
மோமோஸ் 1960களில் இந்தியாவுக்கு வந்தது. ஆரம்பத்தில், எல்லை பகுதிக்கு நெருக்கமாகவுள்ள டார்ஜிலிங், சிக்கிம், லடாக், தர்மஷாலா போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு வந்தது.
நேபாள வர்த்தகர்கள் இந்த செய்முறையை இந்தியாவிற்கு மட்டுமே கொண்டு வந்தனர். அவர்கள் தான் உள்ளூர் சமையல்காரர்களுக்கு இதை சொல்லி கொடுத்துள்ளனர்.
மேலும், நேபாளத்தின் மோமோஸின் அமைப்பு, சுவை ஆகியவை தனித்துவமானது. அதை அப்படியே பிரதிபலித்து இங்கு செய்து வந்தனர். பின்னர் இது இந்தியாவில் பிரபலமான சிற்றுண்டிகளில் ஒன்றாக மாறியது.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வங்காளம், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் போன்ற இடங்களில் புதிய புதிய மாற்றங்களோடு பல மோமோஸ் வகைகள் உருவாகின.
இருப்பினும், இந்தியாவின் கங்கைச் சமவெளிக்கு வந்த பிறகு, நவீன சைவ இந்துக்களில் பெரும்பான்மையினருக்கு உணவளிக்க மோமோ சைவமாக மாற்றப்பட்டது.
ஆனால் மக்கள் சிக்கன் உள்ளிட்ட அசைவ மோமோஸை கைவிடவில்லை. பின்பு அருகில் உள்ள நாடுகளுக்கு எல்லாம் பரவி அந்தந்த நாட்டின் தனி சுவைகளையும் தனக்குள் கொண்டு பல சுவைகளில் அவதாரங்களை எடுத்துள்ளது.