ADANI, LIC, SBI MUTUAL FUND: அதானியால் எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா?

0
678
ADANI

 

ADANI

  • ADANI, LIC, SBI MUTUAL FUND – அதானியால் எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா?: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் முதலீடுகள் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
  • அதானி குழும பங்குகளினால் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அதானி குழும பங்குகளின் சரிவினால் கோடிக்கணக்கில் மக்களின் சேமிப்புக்கு ஆபத்தா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
  • ஹிண்டர்ன் பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழும நிறுவனங்கள் மோசமான வரவு செலவு அறிக்கை, வரி ஏய்ப்பு, செயற்கையான பண பரிவர்த்தனை, போலியான பெயரில் நிறுவனங்கள் என பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பங்கு சந்தையில் தங்களது பங்கு அதிகரிக்க வழிவகுத்துள்ளது என குற்றச்சாட்டினை வைத்துள்ளது.

யாருக்கு பிரச்சனை?

  • ஆனால் அதானி குழுமமோ அதெல்லாம் உண்மை இல்லை. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹிண்டர்ன்பர்க் முழுமையாக ஆய்வு செய்யாமல் அறிக்கை விடுத்துள்ளது. மேலும் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆய்வு செய்து வருவதாக எச்சரிக்கை விடுத்தது.
  • ஆனால் சட்டப்படி நடவடிக்கை தானே, தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். எங்களுக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் இதிலிருந்து நிச்சயம் பின் வாங்க போவதில்லை என ஹிண்டர்ன்பர்க் கூறியுள்ளது.

இனியும் சரிவு தொடரலாம்?

  • இப்படி இரு நிறுவனங்களுக்கு இடையேயான பிரச்சனையில் அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலையானது, தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இந்த போக்கு இனியும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது இந்த பிரச்சனையினை செபியும் துருவ தொடங்கியுள்ள நிலையில், இது அதானி குழுமத்திற்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

எந்த பதிலும் இல்லை?

  • ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் கேட்ட 88 கேள்விகளுக்கு ஒரு கேள்விக்கு கூட அதானி குழுமம், நேரடியாக பதிவில் கூறவில்லை. நாங்கள் முன் வைத்த எந்த குற்றசாட்டுகளுக்கும் அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை.
  • எங்களிடம் சரியான ஆவணங்கள் உள்ளன. ஆக அதானி குழுமம் எங்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

அதானி பங்குகளின் மதிப்பு சரிவு

  • இந்த நிறுவனங்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் பங்கு சந்தையில் தொடர்ந்து கடும் வீழ்ச்சியினை அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டுள்ளன. இதன் காரணமாக அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
  • இதே இந்த 7 நிறுவனங்களின் சந்தை மூலதனமும் 4.2 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அச்சம்

  • இதன் தாக்கம் மியூச்சுவல் பண்டுகளிலும் உள்ளது எனலாம். இந்தியாவில் நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ போன்ற நிறுவனங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • இதன் காரணமாக இந்த நிறுவனங்களின் மூலம் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கும், இது பெருத்த அடியாக இருக்கலாம். இனியும் இது முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பினை கொடுக்கலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பா?

  • ஆனாலும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள இந்த அழுத்தம், எல்ஐசி, எஸ்பிஐ, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் முதலீடு செய்வதில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூறினாலும், கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் அதானி குழுமத்தினால் 16,580 கோடி ரூபாய் எல்ஐசி இழந்துள்ளது.

யார் எவ்வளவு முதலீடு?

  • எல்ஐசி நிறுவனம் 300 கோடி ரூபாயும், எஸ்பிஐ தொழிலாளர் ஓய்வூதிய நிதியும் 100 கோடி ரூபாயும், எஸ்பிஐ இன்சூரன்ஸ் நிறுவனம் 125 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன.
  • இந்த காலகட்டத்தில் அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வைத்திருப்பது சரியா என்ற அச்சமும் எழுந்துள்ளது. இது பல லட்சம் பேரின் சேமிப்புக்கே பாதகமாக இருக்கலாம்.

எஸ்பிஐ கருத்து என்ன?

SBI

  • அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் அளித்த பேட்டியில், எஸ்பிஐ தலைவர் தினேஷ்குமார் காரா அதானி குழுமத்தில் எஸ்பிஐ முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை.
  • ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால் இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை என கூறியுள்ளார்.

எஸ்பிஐ & எல்ஐசி கருத்து?

  • அண்மைக் காலத்தில் அதானி குழுமத்தில் எஸ்பிஐ வங்கி முதலீடு ஏதும் செய்யவில்லை. இனி வருங்காலத்தில் அதானி குழுமத்தில் இருந்து முதலீட்டிற்கான வேண்டுகோள் ஏதும் வந்தால், விவேகத்துடன் அதனை அணுகுவோம் என தெரிவித்துள்ளது.
  • இதே எல்ஐசியோ பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளை பொருட்படுத்தாமல், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மீண்டும் 300 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பது, இதனை பொருட்படுத்தவில்லை என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.