ரகசியமாக சாட் செய்ய இன்ஸ்டராகிராமில் இப்புடி ஒரு ஆப்ஷன் இருக்கா

0
1425
ரகசியமாக சாட் செய்ய இன்ஸ்டராகிராமில் இப்புடி ஒரு ஆப்ஷன் இருக்கா
ரகசியமாக சாட் செய்ய இன்ஸ்டராகிராமில் இப்புடி ஒரு ஆப்ஷன் இருக்கா
உலகளவில் கோடிக்கணக்கான யூசர்களை கொண்டிருக்கும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் செயலி யூசர்களின் தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு விதமான வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 
நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளை சேர்த்து புதிய அப்டேட்டுகளை அந்நிறுவனம் அவ்வபோது அளித்து வருகிறது. அதில் ஒரு வசதியாக தான் வேனிஷ் மோட் (Vanish Mode) அறிமுகபடுத்தபட்டுள்ளது.
To Know More About – CSL PLASMA PROMO CODE 2024
 
இந்த வேனிஷ் மோட் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை மற்றவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான வழியில் அனுப்ப இந்த மோட் உதவுகிறது. இந்த வேனிஷ் மோட் ஆக்டிவேட் செய்து அனுப்பப்பட்ட சாட் மற்றும் அதில் பகிரப்பட்ட தகவல்கள் அனைத்தும் வேனிஷ் மோட் டீஆக்டிவேட் செய்ததும் அழிக்கப்பட்டுவிடும்.
 
இதனை பயன்படுத்துவதற்கு முன் யூசர்கள் முதலில் தங்களின் இன்ஸ்டாகிராம் செயலியை அப்டேட் செய்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும்.

வேனிஷ் மோட் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்

  1. முதலில் உங்கள் மொபைலில் இன்ஸ்டாகிராம் செயலியை ஓபன் செய்து வைத்து கொள்ளவும்.
  2. பிறகு வலது மேல்புறம் உள்ள மேசெஜர் ஐகானை கிளிக் செய்யவும்.
  3. எந்த சாட்டை எனபில் செய்ய வேண்டுமோ அதனை செலக்ட் செய்யவும்
  4. சாட்டின் உள்ளே சென்று ஸ்வைப் அப் செய்தால் வேனிஷ் மோட் ஆக்டிவேட் செய்யப்பட்டுவிடும்.
  5. ஒவ்வொரு முறை யூசர்கள் வேனிஷ் மோட் ஆக்டிவேட் செய்யும் போதும் அதற்கான அறிவிப்பு அந்த சாட் பாக்சிலேயே தோன்றும்.

மேலும் ஒவ்வொருமுறையும் வேனிஷ் மோட் இல்லாத மெசஜ் ரெசிவ் செய்யும் போது அவை வேனிஷ் மோடிற்கு வெளியே காண்பிக்கப்படும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்கள் உண்டு.

இவ்வாறு வேனிஷ் மோடில் அனுப்பப்படும் மெசேஜை காபி செய்யவோ, செவ் செய்யவோ அல்லது பார்வர்ட் செய்வதோ இயலாத காரியமாகும். மேலும் இன்ஸ்டாகிராமில் நீங்கள் கனெக்ட் செய்து வைத்துள்ளவர்கள் மட்டுமே உங்களுக்கு வேனிஷ் மோடில் செய்திகளை அனுப்ப இயலும்.

இந்த வேனிஷ் மோட் தனிப்பட்ட சாட்டிற்கு மற்றுமே பொருந்துவதாகும். குரூப் மெசேஜ் ஆகியவற்றில் வேனிஷ் மோட் வேலை செய்யாது. மேலும் இவ்வாறு வேனிஷ் மோட் உள்ளது என்பதால் யூசர்கள் அதிக கவன குறைவாக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தற்போதும் மூன்றாம் தரப்பு செயலிகளை வைத்து உங்களது மெசஜ் மற்றவர்கள் பார்க்க இயலும் என்பதை மறக்க வேண்டாம்.

செய்திகள் மட்டுமின்றி வேனிஷ் மோடில் அனுப்பப்படும் போட்டோ, வீடியோ, ஸ்க்ரீன்ஷாட் ஆகிய தனிப்பட்ட தகவல் எதையும் வேனிஷ் மோடில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே மிகவும் நல்லது. அடிக்கடி மெசேஜ்களை டெலிட் செய்பவர்களுக்கு இந்த மோட் மிகவும் உபயகமானதாக இருக்கும்.