SAMSUNG S23 SERIES: சாம்சங் எஸ்23 சீரிஸ்

0
478
SAMSUNG S23 SERIES

SAMSUNG S23 SERIES

SAMSUNG S23 SERIES: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் MOBILE தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் எஸ்23 சீரிஸின் மூன்று ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் இணபரவலாக கசிந்து வந்தது.

SPECIFICATIONS

SAMSUNG S23 SERIES: இந்நிலையில், நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குக்கும் விதமாக சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலையும் நேற்று நடந்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது.

மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள்

SAMSUNG S23 SERIES: எஸ்23 சீரிஸ் போன்களைத் தயாரிப்பதில் சாம்சங் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளது. பவர் பட்டன், வால்யூம் பட்டன், எஸ் பென் மற்றும் ஸ்கிரீன் ப்ரொடெக்டர் கிளாஸ் ஆகியவையும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை. மேலும் இந்த மாடலில் அளவில் பெரிய வேப்பர் சேம்பர் கூலிங், ஆர்மர் அலுமினியம் ஃபிரேம் உள்ளது.

DISPLAY / டிஸ்ப்ளே

SAMSUNG S23 SERIES: டிஸ்ப்ளேவை பொறுத்தவரை, புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் 6.8 இன்ச் குவாட் HD+ டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே, 1 முதல் 120 ஹெர்ட்ஸ் வரையிலான வேரியபில் ரிப்ரெஷ் ரேட்டுடன், அதிகபட்சம் 1750 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டுள்ளது. அதுபோக, இவைதவிர இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

CAMERA / கேமரா 

SAMSUNG S23 SERIES: கேமரா அம்சம் குறித்து பார்க்கையில், பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைப் பெறுகிறது. அதில், இரண்டு 10-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ்களுடன் கூடிய 200MP பிரைமரி கேமரா, 12MP 120 டிகிரி அல்ட்ரா வைடு கேமரா, மற்றும் 50MP செல்ஃபி கேமரா உள்ளிட்டவை கொண்டுள்ளது.
இதன்மூலம், குறைந்த-ஒளி கேமரா செயல்திறன் மற்றும் சிறந்த வீடியோ படப்பிடிப்பு அனுபவத்தை வழங்குகிறது என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
PROCESSOR / பிராசஸர்
SAMSUNG S23 SERIES: இந்த எஸ்23 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில், புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி அட்ரினோ 740 GPU பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோக, 8 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் 512 ஜிபி மற்றும் 1 டிபி மெமரி உள்ளிட்ட வேரியன்ட்களில் கிடைக்கிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
COLOUR / நிறம்
SAMSUNG S23 SERIES: மேலும், புதிய சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஃபேண்டம் பிளாக், கிரீன், கிரீம் மற்றும் லாவண்டர் நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி S23 மற்றும் கேலக்ஸி S23 பிளஸ் போன்றே அல்ட்ரா மாடலும் கிராஃபைட், ஸ்கை புளூ, லைம் மற்றும் ரெட் போன்ற நிறங்களில் சில நாடுகளில் மட்டும் கிடைக்கும்.
PRICE & SALES / விற்பனை
SAMSUNG S23 SERIES: சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ரூ.98,350 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி மாடல் ரூ. 1,32,770 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், விற்பனை பிப்ரவரி 17ம் தேதி துவங்க இருக்கிறது.