OPPO FIND N2 FLIP MOBILE REVIEW: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் ஒப்போ ஃபைண்ட் என் 2 ஃப்ளிப் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
ஒப்போ நிறுவனம் தனது முதல் ஃபோல்டு வகை போனான ஒப்போ ஃபைண்ட் என்2 ஃப்ளிப் (Oppo Find N2 Flip) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய கேட்ஜெட் சந்தையில், ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. உயர்தர ஸ்மார்ட்போன் பிரிவில், சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ் நிறுவனங்களும், பட்ஜெட் மற்றும் நடுத்தர ஸ்மார்ட்போன் பிரிவில், ஒப்போ, விவோ, ரியல்மி என பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றனர்.
அதிலும் தற்போது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பிற்கு வரவேற்பு குவியும் நிலையில், எல்லா நிறுவனங்களும் இந்த புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் கான்செப்ட்டில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபோல்டபிள், ஃப்ளிப் போன் தயாரிப்பில் இறங்கியுள்ள மோட்டோரோலா Razr ஸ்மார்ட்போனை மீண்டும் அறிமுகம் செய்தது.
OPPO FIND N2 FLIP MOBILE REVIEW: இதனைத்தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் அதன் கேலக்ஸி ஃப்ளிப் மற்றும் ஃபோல்ட் போன்களை அறிமுகம் செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த வரிசையில் ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்த தனது முதல் ஃபோல்டு வகை போனான ஒப்போ ஃபைண்ட் என்2 ஃப்ளிப் (Oppo Find N2 Flip) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
SPECIFICATIONS / விவரக்குறிப்புகள்
OPPO FIND N2 FLIP MOBILE REVIEW: இது இரண்டு டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கும்:
60Hz ரெஃப்ரெஷ் ரேட்; 720 x 382 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 3.26-இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 1600 நிட்ஸ் பிரைட்னஸ் அளவு 120Hz ரெஃப்ரெஷ் ரேட்; 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.8-இன்ச் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இதன் 3.26 இன்ச் AMOLED கவர் ஸ்க்ரீன் மூலமாக நம்மால் 6 நோட்டிபிகேஷன் வரை பார்க்கமுடியும். இதில் Quick Reply, வசதி உள்ளதால் நம்மால் எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜ் ஆஃப்களை இதன் மூலமாகவே பயன்படுத்தமுடியும்.
இது தவிர புதிய வகை ஹின்ஜ் (Hinge) இடம்பெற்றுள்ளது. இதை இதுவரை 2,16,000 முறை போல்டு செய்து சோதனை செய்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 முறை பயன்படுத்தினாலும் 10 ஆண்டுகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்யும். இதற்கு ரைன்லேண்ட்ஸ் ஆய்வகம் (Rhinelands Lab) சான்றிதழ் அளித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் 4300mAh பேட்டரி மற்றும் 44W Super VOOC சார்ஜிங் இடம்பெற்றுள்ளது. இதனை 50% சார்ஜிங் செய்ய 23 நிமிடங்கள் ஆகும் எனக்கூறப்படுகிறது.
செயல்திறனைப் பொறுத்தவரை MediaTek Dimensity 9000+ சிப்செட் கொண்ட பிராசஸர் உள்ளது. 8/12/16GB ரேம் வசதி மற்றும் 256/512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள Color OS 13 Custom UI மூலம் இயங்குகிறது. அதுபோக, 50MP சோனி IMX 890 + 8MP அல்ட்ரா வைட் சென்சார் கொண்ட டூயல் கேமரா உள்ளது. இன்னர்-டிஸ்பிளேவில் உள்ள செல்ஃபி கேமராவானது 32 மெகாபிக்சல் சென்சாரை பேக் செய்யும்.
OPPO FIND N2 FLIP MOBILE REVIEW: ஒப்போவின் இந்த புதிய ஃபிளிப் போன் ஆஸ்ட்ரல் பிளாக் மற்றும் மூன்லிட் பர்பில் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிகிறது. சீனாவில் ஒப்போ ஃபைண்ட் என்2 ஃபிளிப் போனின் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.71,000 க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.80,000 க்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.