AK62 NEW DIRECTOR: அஜித்குமார் – மகிழ் திருமேனி – லைக்கா கூட்டணி – HAPPY NEWS

0
544
ak62 new director

AK62 NEW DIRECTOR: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் TNPSC தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மகிழ் திருமேனியை இளைய தளமபதி விஜய் கைவிட்ட நிலையில் அஜித்குமார் – மகிழ் திருமேனி – லைக்கா கூட்டணியில் புதிய படம் விரைவில் உருவாக போகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

ak62 new director

தமிழ் திரை உலக வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம் என்னவென்றால் மகிழ் திருமேனி மற்றும் அஜித் கூட்டணி இணைவது தான்.

ஏனென்றால் இதுவரை மகிழ்திருமேனி பெரிய நடிகர்களின் படங்களை இயக்கியது இல்லை. இப்படி இருக்கையில் அஜித் இவருக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதாவது மகிழ்திருமேனி பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கவில்லை என்றாலும் அவர் இயக்கிய அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதிலும் குறிப்பாக தடம் மற்றும் தடையற தாக்க படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.

இவ்வாறு அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்போதும் நிலைத்து நிற்க மகிழ்திருமேனி ஒரு முக்கிய காரணமாக உள்ளார். அதுமட்டுமின்றி தளபதி விஜய்க்கு மகிழ் திருமேனி இரண்டு கதை சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு கதையுமே விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் விட்டதாம்.

ஆகையால் மகிழ்திருமேனி, விஜய் கூட்டணி தற்போது வரை அமையாமல் போனது. அதன் பிறகு தான் அஜித், விக்னேஷ் சிவன் கூட்டணி சமீபத்தில் பிளவு ஏற்பட்ட நிலையில் மகிழ் திருமேனி அஜித்திடம் கதை சொல்லி உள்ளார். கதையைக் கேட்டவுடன் அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஓகே சொல்லிவிட்டாராம்.

இந்த நிலையில் அஜித் மகிழ் திருமேனிக்கு கண்டிஷன் ஒன்றை போட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது இயக்குனர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட நடிக்க ஓகே சொல்லி உள்ளார். ஆனால் படம் முழுவதும் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற வேண்டும் அதற்கேற்றார் போல மாற்றங்களை செய்யும்படி கண்டிஷன் போட்டுள்ளார்

அஜித்தின் கண்டிஷனுக்கு ஏற்றார் போல கதையில் மகிழ் திருமேனி மாற்றங்களை செய்த பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது. இந்தப் படம் லியோ படத்துடன் மோதும் எனவும் சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.