ANDROID 14 IN TAMIL 2023: ஆண்ட்ராய்டு-14 OSல் வரவிருக்கும் அட்டகாசமான அம்சங்கள் பற்றிய தகவல்கள்

0
504
ANDROID 14 IN TAMIL
ANDROID 14 IN TAMIL

ANDROID 14 IN TAMIL: சமீபத்தில் நடந்த கூகுள் நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில், மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ராய்டு 14 OS பற்றிய தகவல்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக புதிய வெர்ஷனில் வழங்கப்படவிருக்கும் சில அட்டகாசமான அம்சங்கள் பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்ட்ராய்டு 14-க்கான டெவலப்பர் பிரிவியூவ் வெர்ஷன் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இதன் அடுத்த கட்டமான பீட்டா வெர்ஷன், ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டு, தகுதியுடைய ஸ்மார்ட்போன்களில் இதனைப் பயனர்கள் தற்போது டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 OSல் பேட்டரி எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கான விருப்பம் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பேட்டரியின் தயாரிப்புத் தேதி, சார்ஜிங் நிலை, முதல் பயன்பாட்டுத் தேதி, பேட்டரி ஹெல்த், சார்ஜிங் பாலிசி போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

முதற்கட்டமாக இந்த பேட்டரி மேனேஜிங் அம்சமானது ஆண்ட்ராய்டு 14 பீட்டா 2 வெர்ஷன் மற்றும் பிக்சல் ஃபோன்களில் மட்டுமே வேலை செய்யும். ஒருவேளை இந்த இயங்குதளம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமானால், எல்லா பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல இந்த இயங்குதளத்தில் ‘பைண்ட் மை டிவைஸ்’ அப்டேட் செய்யப்பட்டு, முற்றிலும் புதுமையான அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது இந்த அம்சத்தைப் பயன்படுத்தி பல்வேறு சாதனங்களை டிராக் செய்வது மட்டுமின்றி, அவற்றைப் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். இதுதவிர, வேறு யாராவது உங்கள் சாதனத்தை ட்ராக் செய்தாலும், எச்சரிக்கும் விடுக்கும் வகையில் இந்த புதிய அம்சம் மேம்படுத்தப்பட இருக்கிறது.

மேலும் பயனர்கள் தங்களின் லாக் ஸ்கிரீனை புது விதமான ஷார்ட்கட்கள் மற்றும் அழகாக வடிவமைக்கப் பட்ட கடிகாரங்களைப் பயன்படுத்தி தங்கள் விருப்பப்படி கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

இது பயனர்களின் போனை சுவாரசியமாக மாற்றும். அதேபோல, 14 வித்தியாசமான எமோஜி வால்பேப்பர்களைப் பயன்படுத்தி, ஏராளமான பேட்டன்கள் மற்றும் நிறங்களைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

WHATSAPP: ஒரே வாட்ஸ்அப் கணக்கை 4 செல்போனில் பார்க்கலாம் – புதிய வசதி அறிமுகம்

ANDROID 14 IN TAMIL: இதனால் பயனர்கள் தனித்துவமிக்க வால்பேப்பரை செட் செய்து கொள்ள முடியும். இந்த வால்பேப்பரில் செட் செய்யப்படும் எமோஜிகளை தொடும்போது அவற்றிற்குரிய பாவனைகளை அது வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் புதிதாக சினிமாட்டிக் வால்பேப்பர் அம்சத்தைப் பயன்படுத்தி, எந்த போட்டோவையும் 3டி படமாக மாற்றி, மோஷன் எஃபெக்டுகளை அவற்றிற்கு வழங்க முடியும்.

இவற்றை பேக்ரவுண்டாகவும் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு திறன்பேசித் திரையை, அசத்தலாக மாற்றலாம். இதுபோன்று மேலும் பல புதிய அம்சங்கள் இந்த இயங்குதலத்தில் வரவிருக்கிறது. எனவே இதில் தனித்துவமான பல அம்சங்கள் வரவிருப்பதால் பயனர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.