BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL 2023: அத்திப்பழம் பயன்கள்

0
1155
BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

BENEFITS OF ATHIPAZHAM: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் அத்திப்பழம் பயன்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

​அத்திப்பழம்

BENEFITS OF ATHIPAZHAM: அத்திப்பழம் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய பழம் என்பது எல்லாருக்கும் தெரியும். இதை அஞ்சீர் என்ற பெயரில் அழைக்கின்றனர்.

To Know More About – Onetamil

இது எடை இழப்புக்கும் வயிற்று பகுதியில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. எனவே உங்க கலோரி டயட்டில் இந்த அத்திப்பழத்தை தாராளமாக சேர்க்கலாம். அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL
BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது.

READ ABOUT – பாரதிதாசன் வரலாறு – BHARATHIDASAN HISTORY IN TAMIL 

அத்திப் பழங்கள் 6&8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி, நாட்டு அத்தி.

அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும்.

விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது.

கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.

அத்திப்பழ சத்துகள்

BENEFITS OF ATHIPAZHAM: 50கி. அளவுள்ள அத்திப்பழம் ஒன்றில் நார்ச்சத்து-5.8%, பொட்டாசியம் -3.3% கால்சியம் -100மி.கி. இரும்பு -2.மி.கி. மாங்கனீஸ்-3%, கலோரி -2% வைட்டமின் பி 6-3% அளவு உள்ளது.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL
BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

மற்ற பழங்களை விட அத்திப்பழத்தில் 2 முதல் 4 மடங்கு வரை தாது உப்புக்களும், சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. அதேபோன்று நார்ச் சத்துகளும் கால்சியமும் அதிக அளவு உண்டு.

அத்திப்பழத்தை சாறாக்கி குடித்தாலும் உலர வைத்துச் சாப்பிட்டாலும் இதிலிருக்கும் சத்துக்களின் அளவு குறைவதில்லை. அத்திப் பூக்களோடு அத்தி இலை, அத்தி வேர், அத்திப் பட்டை, அத்திப் பால் அனைத்துமே மிகச் சிறந்த மருத்துவக்குணங்களைக் கொண்டது.

எப்படி சாப்பிடலாம்?

BENEFITS OF ATHIPAZHAM: அத்தி மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும் அத்திமரத்தைக் கண்டால் அதிலிருக்கும் அத்திப்பிஞ்சுகளைப் பறித்து பொரியலாக, கூட்டாகச் செய்து சாப்பிடலாம்.

அத்திப்பழங்கள் பெரும்பாலானவை சொத்தையாக இருக்கும். உள்ளிருக்கும் பழப்பகுதியை நுணுக்கமாக ஆராய்ந்தால் மெல்லிய புழுக்கள் இருக்கும்.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL
BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

அதனால்தான் அத்திப்பழம் சொத்தைப்பழம் என்றும் சொல்வார்கள். சுத்தமான அத்திப்பழங்களைச் சாறாக்கி தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து குடிக்கலாம். இந்த சாறில் கல் உப்பு சேர்த்தும் பருகுவது உண்டு.

விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பதப்படுத்தப்பட்ட உலர் அத்திப்பழங்கள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. நாள்கணக்கில் கெடாமல் இருக்கும் இவை, நாட்டுமருந்துக் கடைகளிலும் தற்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது.

பிணி நீக்கும் அத்திப்பழம்

BENEFITS OF ATHIPAZHAM: ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் 3 வேளையும் வேளைக்கு ஒன்றாக உலர் அத்திப்பழம் ஒன்றைச் சாப்பிட்டு வந்தால் இரும்புச்சத்து நிறைந்த அத்திப்பழத்தால் ஒரே மாதத்தில் ஹீமோகுளோபின் அளவு 1 கிராம் வரை உயரும்.

கடுமையான ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களும், போதிய ரத்தமின்றி இருக்கும் கர்ப்பிணிகளும் உலர் அத்திப்பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.

மேலும் செரிமானப் பிரச்சினைகள் இல்லாமல், குடல்களின் இயக்கம் சீராக இருந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் வராமல் தடுக்கலாம். நாள் ஒன்றுக்கு நமக்குத் தேவையான நார்ச்சத்துகளை மூன்றே மூன்று உலர்ந்த அத்திப்பழங்கள் கொடுத்துவிடுகின்றன.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL
BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

உடலில் செரிமானத்தைத் தூண்டும் சக்தி அத்திப் பழத்துக்கு உண்டு. நீண்டகாலமாகத் தொடர்ந்து மலச்சிக்கல் பிரச்சினைகளில் அவதிப்படுபவர்களுக்கு பக்கவிளைவுகள் இல்லாத அற்புத மருந்து உலர் அத்திப்பழம். கடுமையான ரத்த மூலம் இருப்பவர்கள், அத்திப்பிஞ்சுகள் கொண்டு கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கப் பெறலாம்.

சிறு குடல் பெருங்குடல்களில் தேங்கியிருக்கும் நச்சுகளால் சிலருக்கு புற்று நோய் ஏற்படுகிற அபாயமும் உண்டு. குடலில் தங்கியிருக்கும் நச்சுகளை நீக்கி, குடலை சுத்தமாக்குவதோடு உடலில் புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் தரமான ஆன்ட்டி-ஆக்சிடன்ட் சத்துகளையும் அதிகம் கொண்டிருக்கிறது அத்திப் பழம்.

சோடிய உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் உப்பு குறைந்தும் இருக்கிற வேளையில்தான் ரத்த அழுத்தம் அதாவது பிளட் பிரஷர் ஏற்படுகிறது. உலர் அத்திப்பழத்தில் பொட்டாசியம் அளவு அதிகமாகவும் சோடியம் அளவு குறைவாகவும் இருப்பதால் ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்கிறது. தினமும் உட்கொண்டால் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை நெருங்கவே நெருங்காது.

நமது உடலின் எலும்புகளை வலுப்படுத்த கால்சியம் மிக்க உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். கால்சியம் நிறைந்த உலர் அத்திப்பழங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது.

உலர் அத்திப்பழத்தில் கலோரியும், கொழுப்பும் குறைவாகத்தான் இருக்கிறது. உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டை பின்பற்றும்போது சத்துக்களையும் இழக்க நேரிடும். ஆனால் சத்துக்களையும் இழக்காமல் உடல் எடையையும் குறைக்க அத்திப்பழம் மிகச்சிறந்ததாக டயட்டீஷியன்கள் தெரிவிக்கிறார்கள்.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

அத்தி இலையை நிழலில் காயவைத்து பொடியாக்கி காற்றுபுகாத டப்பாவில் வைத்து, அரை டிஸ்பூன் தேனில் அரை டீஸ்பூன் அத்திப்பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான நோய்கள் அண்டவே அண்டாது. வாய்ப்புண், ஈறு வீக்கம் தொடர்ந்து இருந்தால் அத்தி இலைகளை நீரில் கொதிக்கவிட்டு வாய் கொப்புளித்தால் நிவாரணம் பெறலாம்.

சிறு துண்டுகளாக நறுக்கிய அத்திப்பட்டையை நீரில் ஊறவைத்து மறுநாள் குடித்தால் மூட்டு வலி, வாதநோய் குணமாகும். அத்தி வேருக்கு தாய்ப்ப்பால் பால் நன்றாகச் சுரக்கச் செய்யும் வலிமை உண்டு.

வெள்ளைப்படுதல், மேக நோய், பெரும்பாடு பிரச்சினை இருக்கும் பெண்கள் இந்தப் பாலை வெறும் வயிற்றில் அருந்திவந்தால் அதிசயிக்கத்தக்க வகையில் நோய் கட்டுப்படும்.

இதய நோய்கள், மூலம், சீரான கொழுப்பு, உடல் பலம், கல்லீரல், குடல் சுத்தம், நீரிழிவு, கருவுறுதல், ரத்த விருத்தி, ஆண் மலட்டுத்தன்மை போக்குதல், வெண் புள்ளிகள் நீக்குதல், கரும்பித்தம் நீக்குதல் இப்படிப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் ஆற்றலும் குணமும்தான் அத்திப்பழத்தின் தனி ஸ்டைல்!

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

ஒரு தம்ளர் நீரில் உலர் அத்திப்பழம் மூன்றைப் போட்டு மறுநாள் காலையில் அத்திப்பழத்தை மென்று சாப்பிடலாம். லேசான இனிப்புச்சுவை கொண்டிருப்பதாலும் மெல்லும் போது ரவை போன்ற விதைகள் வாயில் படுவதாலும் குழந்தைகள் சாப்பிடுவதற்கு விரும்பமாட்டார்கள்.

பாலில் அத்திப் பழத்தை பத்து நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அடித்து அத்திஷேக் போல் செய்து குடித்தால் விரும்பிக் குடிப்பார்கள். அத்திப்பூத்தாற் போல் அத்திப்பழத்தை பயன்படுத்தாமல், அனுதினமும் அத்திப்பழத்தை பயன்படுத்துவோம். பலம் பெறுவோம்.

​உடல் எடையை குறைக்க

BENEFITS OF ATHIPAZHAM: அத்திப்பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இதனால் அத்திப்பழத்தை சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகிறது.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

இதனால் தேவையில்லாமல் கலோரி நிறைந்த உணவுகளில் நாட்டம் கொள்வது தவிர்க்கப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் குடல் அமைப்புக்கு உதவுகிறது. இது செரிமான அமைப்பை பலப்படுத்த உதவுகிறது.

​செரிமான ஆற்றலும் வளர்சிதை மாற்றமும்

BENEFITS OF ATHIPAZHAM: அத்திப்பழத்தில் உள்ள ஃபைசின் என்ற நொதி நம்முடைய செரிமான மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது. இது உணவை விரைவாக செரிக்க உதவுகிறது.

அதே போல் உடற்பயிற்சியின் போது தசைகள் அதிக கலோரியை எரிக்க உதவுகிறது. ஏனெனில் இதில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது எடை இழப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது இதய நோய்களில் இருந்து நம்மை தடுக்க உதவுகிறது.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

மேலும் அத்திப்பழத்தில் உள்ள கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்ற தனிமங்கள் எடை இழப்புக்கு உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் ஏ மற்றும் பி வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை துரிதப்படுத்த உதவுகிறது.

​நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள்

BENEFITS OF ATHIPAZHAM: நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு உணவில் இனிப்பு சுவையைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். வீட்டில் யாருக்கும் தெரியாமல் இனிப்பை வாங்கி சாப்பிடுவது போன்றவற்றைச் செய்வார்கள்.

உங்களுடைய இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற ஆசைக்கும் அத்திப்பழம் ஒரு மாற்றாக இருக்கும். இருப்பினும் இதை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் டயாபெட்டிக் நோயாளிகள் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

BENEFITS OF ATHIPAZHAM (FIG FRUITS) IN TAMIL

பிற பயன்கள்

BENEFITS OF ATHIPAZHAM: தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.

அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து மூலநோயைக் குணப்படுத்த மருந்தாகக் கொடுப்பார்கள்.இலைகளை உலர வைத்துப் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இதைத் தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.

உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும்.வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.