COLD SHOWER BENEFITS IN TAMIL 2023: ஆண்கள் ஏன் தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் தெரியுமா?

0
426
COLD SHOWER BENEFITS IN TAMIL
COLD SHOWER BENEFITS IN TAMIL

Cold Shower Benefits In Tamil 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் ஆண்கள் ஏன் தினமும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் தெரியுமா? தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

குளிர்ந்த நீர் சிகிச்சை என்பது பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சிகிச்சை முறையாகும். இந்த குளிர்ந்த நீர் சிகிச்சையானது நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது.

எனவே ஆண்கள் இந்த குளிர்ந்த நீர் சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் போது பல்வேறு வகையான நன்மைகளை பெற முடியும். அதுவும் காலையில் 30-60 விநாடிகள் குளிர்ந்த நீரில் குளிப்பது மிகவும் நல்லது. ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைச் செய்யலாம்.
ஆண்கள் தினசரி குளிர்ந்த நீரில் குளிப்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்தல், மன அழுத்தம் குறைதல் மற்றும் உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். சரி வாங்க தினசரி குளிர்ந்த நீரில் குளிப்பதால் எந்த மாதிரியான நன்மைகளை பெற முடியும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உங்கள் உடலில் இரத்த வெள்ளை அணுக்களின் அளவு அதிகரிக்கிறது. மேலும் உங்கள் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உங்கள் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உங்கள் உடல் வெப்பநிலையை சமநிலை செய்ய இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
COLD SHOWER BENEFITS IN TAMIL
COLD SHOWER BENEFITS IN TAMIL

மன அழுத்தம் குறைகிறது

Cold Shower Benefits In Tamil 2023: குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உங்கள் நரம்புகள் அமைதியடைந்து மன அழுத்தம் குறைகிறது. இதனால் நீங்கள் ரிலாக்ஸாக செயல்பட முடியும். எனவே உங்கள் மன அழுத்தத்தை குறைக்க ஆண்கள் குளிர்ந்த நீர் குளியலை மேற்கொண்டு வரலாம்.

கவனம் அதிகரித்தல்

குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் உடலை எழுப்பி விழிப்புணர்வாக செயல்பட உதவுகிறது. குளிர்ந்த நீர் உங்களை ஆழமாக சுவாசிக்க வைக்கும். இது உங்கள் உடலில் உள்ள கார்பன் டை ஆக்சைடின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் உங்கள் கவனம் சிதறாமல் ஒருமுகத்துடன் நீங்கள் செயல்பட முடியும்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது

குளிர்ந்த நீரில் குளிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைத்து உடல் குறைக்க உதவுகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி கலோரிகளை எரிக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் குளிர்ந்த நீரில் குளித்து வரலாம்.

உடல் மற்றும் மன வலிமையை அதிகரிக்கிறது

Cold Shower Benefits In Tamil 2023: ஆண்கள் தினசரி குளிர்ந்த நீரில் குளிக்கும் போது அவர்களின் உடல் மற்றும் மன வலிமையானது அதிகரிக்கிறது. குளிரைத் தாங்கும் மன வலிமை அவர்களுக்கு வருகிறது. இதன் மூலம் அவர்களின் மன வலிமையை வலுப்படுத்த முடியும்.
COLD SHOWER BENEFITS IN TAMIL
COLD SHOWER BENEFITS IN TAMIL

மனச்சோர்வை நீக்குகிறது

ஆண்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகளில் மனச்சோர்வும் மிகவும் முக்கியமானது. ஆண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது ஒரு வகை ரசாயனமான நோராட்ரீனலைனன் என்ற கெமிக்கலை தூண்டுகிறது. இது ஆண்களின் மனச்சோர்வை போக்க உதவி செய்யும்.

சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்

குளிர்ந்த நீரில் குளிக்கும் போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து செல்களை வளர்க்க உதவுகிறது. இதன் மூலம் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
இது சரும துளைகளில் உள்ள அழுக்குகளை அகற்றி அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குகிறது. குளிர்ந்த நீர் சரும துளைகளை சுருக்கி தோல் சீக்கிரம் வயதாவதை தடுக்கிறது. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.

டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகரிப்பு

Cold Shower Benefits In Tamil 2023: ஆண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது அவர்களின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அதிகரிக்கிறது. குளிர்ந்த நீர் ஆண் ஹார்மோன் மற்றும் கார்டிசோல் ஹார்மோனை சமநிலையில் வைக்க உதவுகிறது. எனவே ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த நீர் குளியல் போடுவது நல்லது.

விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது

ஆண்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது அவர்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே குளிர்ந்த நீரில் குளிப்பது அவர்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரித்து கருவுறுதல் சிக்கலை கலைக்க உதவுகிறது.
COLD SHOWER BENEFITS IN TAMIL
COLD SHOWER BENEFITS IN TAMIL

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

Cold Shower Benefits In Tamil 2023: குளிர்ந்த நீரில் குளிப்பது இரத்த குழாய்களை விரிவுபடுத்துகிறது. இதனால் இரத்த நாளங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் இதய நோய் பிரச்சினைகளை தடுக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

நல்ல தூக்கத்தை தருகிறது

தூங்கப் போவதற்கு முன்பு குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். படுக்கைக்கு போவதற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்பு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இது உங்கள் உடலை அமைதிப்படுத்தி நிம்மதியான தூக்கத்தை தருகிறது. உடலுக்கு இது நல்ல குளிர்ச்சியையும் தருகிறது.

செல்லுலைட்டை குறைக்கிறது

Cold Shower Benefits In Tamil 2023: குளிர்ந்த நீர் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள செல்லுலைட்டை குறைக்கிறது. சருமத்தில் உள்ள சரும தொய்வு, சுருக்கங்கள் போன்றவற்றை போக்க உதவுகிறது. வயதான அறிகுறிகளை போக்க உதவுகிறது.