CWC SEASON 4 – OTTERI SIVA: குக் வித் கோமாளி செட்டுக்கு குடித்துவிட்டு வந்த கோமாளி

0
564
CWC SEASON 4 - OTTERI SIVA

CWC SEASON 4 - OTTERI SIVA

CWC SEASON 4 – OTTERI SIVA: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் TNPSC தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

குக் வித் கோமாளி (COOK WITH COMALI) நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சீசன் 4 தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இந்த சீசனில் கோமாளிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய கோமாளிகள் இருந்தாலும் கூட இம்முறை, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா ஆகியோர் புதிய கோமாளிகளாக அறிமுகமாகியுள்ளனர். ஷிவாங்கி இந்த முறை குக்-காக வந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரம் ஓட்டேரி சிவா கோமாளியாக இருந்த நிலையில், இந்த வாரம் அவர் நிகழ்ச்சியில் இல்லை. அவருக்கு பதிலாக தங்கதுரை கோமாளியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் கடந்த வாரம் களமிறங்கிய புதிய கோமாளியான ஓட்டேரி சிவா குடித்துவிட்டு படப்பிடிப்புத் தளத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதாக தகவல் பரவிவருகிறது. அதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.