FIRE BOLTT ETERNO SMART WATCH REVIEW 2023: பயர் போல்ட் நிறுவனம் ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட்வாட்ச்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும்நிலையில், புதுப்புது அப்டேட்களுடன் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்வாட்சுகள் சந்தையில் குவிந்து வருகின்றன.
ஒருசிலர், தங்களது ஆரோக்கியம் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் கிடைப்பது உதவியாக இருப்பதாக வாங்குகின்றனர். ஒரு சிலர் பேஷனுக்காக வாங்குகிறார்கள். இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றன.
அந்த வரிசையில் இந்தியாவில் கேட்ஜெட்ஸ் தயாரிப்பில் வளர்ந்து வரும் ஃபயர்போல்ட் நிறுவனம் ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய எடர்னோ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்வாட்ச்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்நிறுவனம் இந்த புதிய எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது. சதுரங்க வடிவிலான டயல் கொண்ட இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச், மெல்லிய பெசல்கள் மற்றும் 1.99 இன்ச், 240×283 பிக்சல் ரெசல்யூஷனுடன்கூடிய HD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
குறிப்பாக ப்ளூடூத் காலிங், கால் ஹிஸ்ட்ரி உள்ளிட்ட பல கூடுதல் வசதிகள் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இன்-பில்ட் மைக்ரோபோன், ஸ்பீக்கர், குயிக் டயல் பேட், சின்க் காண்டாக்ட்ஸ், ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், இன்பில்ட் கேம்ஸ் எக்கச்சக்க வசதிகள் உள்ளன.
FIRE BOLTT ETERNO SMART WATCH REVIEW 2023: இதுதவிர, 120 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, வொர்க்அவுட் மோட்கள், SpO2 மாணிட்டரிங், ஹார்ட் ரேட் மாணிட்டரிங் மற்றும் ஸ்லீப் டிராக்கிங், மற்றும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
280 எம்ஏஎச் பேட்டரி அளவை கொண்ட இந்த ஃபயர் போல்ட் எடர்னோ இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழு சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்குத் தேவையான பேட்டரி பேக்கப் வழங்கும். இத்துடன் IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
ஃபயர் போல்ட் எடர்னோ ஸ்மார்ட்வாட்ச் புளூ, பிளாக், பெய்க், சில்வர் கிரீன், பிளாக் சில்வர் மற்றும் கோல்டு பின்க் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை அறிமுக சலுகையாக ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.