GURU PEYARCHI PALANKAL 2023 / மேஷம் முதல் கும்ப ராசி வரை உள்ள அனைத்து ராசிக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் 2023

2
2143
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் மேஷம் முதல் கும்ப ராசி வரை உள்ள அனைத்து ராசிக்கும் சனி பெயர்ச்சி பலன்கள் 2023 தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2023

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9-ம் தேதி சனிக்கிழமை (22.04.2023) சுக்ல பட்சத்து துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், கௌலவம் நாமகரணம், ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், மேஷ லக்னத்தில், சந்திரன் ஓரையில், குரு பகவான் மீனத்திலிருந்து மேஷம் ராசிக்குள் அதிகாலை 5 மணி 14 நிமிடத்துக்கு பெயர்ச்சியாகிறார்.
காலப்புருஷ தத்துவப்படி குருபகவான் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைவதால் சொத்து மதிப்பு உயரும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

மேஷம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை உள்ள காலகட்டங்களில் குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண இழப்பு, ஏமாற்றம், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
ஜூன் 06, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை குருபகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள், மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு அசதி, சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

ரிஷபம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மருத்துவச் செலவுகள், திடீர் பயணங்கள் உண்டு. மகான்கள், சித்தர்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். தடைபட்ட கல்யாணம் முடியும்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அரசால் ஆதாயமடைவீர்கள். ஆனாலும் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டை சீரமைப்பீர்கள்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாளாக தடைபட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும்; என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை, இனம் தெரியாத கவலைகள் வந்துச் செல்லும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

மிதுனம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: மிதுனம் (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்கு கூடும். சகோதர வகையில் நன்மை உண்டு.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாகன விபத்து, மின்னணு, மின்சார சாதனப் பழுது, தொண்டைப் புகைச்சல், சளித் தொந்தரவு வந்து போகும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

கடகம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
To Know More About – Yujiro Hanma
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் மூத்த சகோதர வகையில் உதவி உண்டு. மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சொத்துகள் வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்து போகும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

சிம்மம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும்.
பணவரவு உண்டு. செல்வாக்கு கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு திடீர் பணவரவு, எதிலும் வெற்றியுண்டு, எதிரிகளை வீழ்த்துவீர்கள், திருமணம் கூடிவரும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். முன்னேற்றம் தடைபடாது.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் நிர்வாகத் திறமை கூடும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் பிரபலங் களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

கன்னி

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் செல்வதால் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பணவரவு குறையாது. புகழ், கவுரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் தனபாக்யாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் வெற்றி, வாகனம், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வீடு வாங்குவது, கட்டுவது யாவும் உண்டாகும்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அரசு விஷயங்களில் கவனம் தேவை. தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கணவன் – மனைவிக்குள் ஈகோ வந்து நீங்கும். அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

துலாம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டங்களில் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். போட்டியில் வெற்றி பெறுவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவினங்கள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிலும் வெற்றி, எதிர்பாராத பணவரவு உண்டு.
கூடாப்பழக்க வழக்கம் நீங்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். அண்டை மாநிலக் கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். விலகியிருந்த மூத்த சகோதரர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தவும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் உங்கள் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். கணவன் – மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

விருச்சிகம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். ஆனால் விசாகம் 4-ம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப் புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைபட்ட காரியங்கள் முடிவடையும்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும்.
அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வாகனம் மாற்றுவீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தாலும், முடிவில் சமாதானம் உண்டாகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும். பழைய வீட்டை சீர் செய்வீர்கள்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும். பழைய சொந்தங்கள் தேடி வரும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். மனைவிக்கு புது வேலை கிடைக்கும். அவரின் ஆதரவு பெருகும். மனைவி வழி சொத்துகளும் கைக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் பலிதமாகும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

தனுசு

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும்.
உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.
சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளவேண்டாம். ஆனால் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். வீடு மாறுவீர்கள். எதைச் செய்தாலும் பலமுறை யோசனை செய்தும், பெரியவர்கள், அனுபவசாலிகளின் ஆலோசனையின் பேரிலும் செய்ய வேண்டும்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள்.
திடீர் பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். பிள்ளைகள் படிப்பில் வெற்றி பெற்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் தொண்டை வலி, கணவன் – மனைவிக்குள் பிரிவு, வீண் வாக்குவாதம், வாகனப் பழுது, பணப் பற்றாக்குறை வந்து செல்லும். வரவுக்கு மீறி செலவுகள் இருக்கும். எச்சரிக்கையாக இருக்கவும். வீண் வம்புக்கு செல்ல வேண்டாம்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

மகரம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்கள் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்.
தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள். வீண் அலைச்சலால் உடல்நலம் கெடும். உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளவும்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.
காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். வீட்டை கட்டி முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. புது வேலை கிடைக்கும்.
சமையலறையை நவீனமாக்குவீர்கள். புதிய நண்பர்கள் மூலம் சில ஆதாயங்கள் உண்டு. குழந்தைகளின் மனதறிந்து அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனை உங்கள் மனதில் இருக்கட்டும். அவர்கள் விரும்பும் படிப்பிலேயே அவர்களை சேர்க்கவும்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள்.
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. பழையபடி உறவினர்களுடன் பேசி, மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும். பழைய பகையை மனதில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலம் குறித்த கவலை தீரும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

கும்பம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும்.
ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளிப் பிரச்சினையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். முதுகு வலி, தலை வலி வந்து நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஊர் பொதுக் காரியங்களில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம்.
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை குரு பகவான் உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் பாதியில் நின்ற வேலைகள் முடியும்.
எதிர்பார்த்து ஏமாந்து போன பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்துவந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும். மன அமைதி பெற கோளறு பதிகம் படிக்கவும்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.
சந்தை நிலவரத்தை அவ்வப்போது அறிந்து கொண்டு முடிவெடுங்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். வேலையாட்களிடம் கறாராக நடந்து கொள்ளாமல் கனிவாகப் பேசி வேலை வாங்குங்கள். ஹோட்டல், விடுதிகள், வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும்.
GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023

மீனம்

GURU PEYARCHI PALANKAL 2023 / குரு பெயர்ச்சி பலன்கள் 2023: மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப். 06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.
குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்
ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப். 06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, இந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்சினை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.
ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும்.