KARADAIYAN NONBU ADAI RECEIPE IN TAMIL 2023: மங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க மாசி மாதத்தின் இறுதியும், பங்குனி மாதத்தின் முதல் தேதியிலும் சாவித்திரி நோன்பு என்னும் காரடையான் நோன்பு கடைப்பிடிப்பார்கள்.
VELLI KILAMAI SAMBIRANI: வெள்ளிக்கிழமைகளில் இதை மட்டும் செய்தா போதும் குடும்ப பிரச்சனைகள் தீரும்
இந்த நோன்பின் போது பெண்கள் நெய்வேத்தியத்திற்காக காரம் அல்லது இனிப்பு அடையை செய்வது வழக்கம். இந்த வருட காரடையான் நோன்பு மார்ச் மாதம் 14 ஆம் தேதி வருகிறது.
தேவையான பொருட்கள்
- வறுத்த பச்சரிசி மாவு – 1 கப்
- காராமணி – 1/4 கப்
- தேங்காய் – அரை கப் வெல்லம்
- ஏலக்காய் தூள் – 1 கப்
- தண்ணீர் – 2 கப்
செய்முறை
- KARADAIYAN NONBU ADAI RECEIPE IN TAMIL 2023: முதலில் காராமணியை வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.
- வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் “தள தள” என்று கொதிக்கும்போது காராமணி, தேங்காய் துண்டுகள், ஏலப்பொடி சேர்க்கவும்.
- வறுத்து வைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும். மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து அடைபோல் தட்டி வாழை இலையில் வைக்கவும்.
- இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான காரடையான் நோன்பு அடை ரெடி…