KNOW POWERCUT OF YOUR AREA 2023: தினமும் எந்தெந்த பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளத்தின் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடக்கும்போது காலை 9 மணியில் தொடங்கி மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். இதைப்பற்றி மின்சார வாரியம் சார்பில் முன்கூட்டிய தகவல் அளிக்கப்படுகிறது.
ஆனால், பல நாளிதழ்கள் முன்போல தினசரி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரத்தை வெளியிடுவது இல்லை. இதனால் பராமரிப்புப் பணிக்காக மின்தடை ஏற்படும்போது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
அதுவும் தற்போது கோடை காலத்தில் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் சூழலில் மின்தடை ஏற்படுவது மக்களை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்தச் சூழலில் முன்கூட்டியே மின்தடை ஏற்படும் பகுதிகளை அறிந்து வைத்துக்கொள்வது பயன்படும்.
https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml என்ற மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளம் மூலம் இந்த தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் எவ்வளவு நேரம் மின்தடை ஏற்படும் என்று தினசரி அறிய முடியும்.
KNOW POWERCUT OF YOUR AREA 2023: இந்த இணையதளத்தில் உங்கள் பகுதியைத் தேர்வு செய்து பராமரிப்பு பணி காரணமாக மின்தடை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம்.
எந்த நாளில் மின்தடை ஏற்படும் என் அறிய இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், திடீரென ஏற்படும் மின்வெட்டி குறித்து இந்தத் தளத்தில் தகவல் அறிய முடியாது. ஆனால், மின்சார வாரியத்திடம் புகார் அளிக்க 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.