KOLLU: கொள்ளு – BENEFITS IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் TNPSC தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
நமது தினசரி உணவில் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வது, உடலையும் தசைகளையும் வலுப்படுத்தும். புரதத்தின் வளமான மூலமான கொள்ளு நமக்கு ஆரோக்கியத்தை அளவில்லாமல் அள்ளிக் கொடுப்பது.
இரும்புச்சத்து, பொட்டசியம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. கொள்ளு. சித்த வைத்தியத்திலும், ஆயுர்வேதத்தில் கொள்ளு மருந்தாகவும் பயன்படுத்தப்பகிறது.
கொள்ளு தின்றால் கொழுப்பு குறையும் என்பது பழமொழி. தென்னிந்தியாவில் அதிகம் விளையும் கொள்ளு, மிகவும் சத்து வாய்ந்தது. கொழுப்பைக் குறைப்பதில் இதன் பங்கு மிகவும் அபரிமிதமானது.
இளைத்தவனுக்குக் எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழி, கொழுப்பை குறைக்கும் தன்மை வாய்ந்தது கொள்ளு என்பதை உணர்த்துகிறது.
அதிலும், முளைக் கட்டியக் கொள்ளுப் பயறில் மேலும் அதிக சத்துக்கள் இருப்பதால், முளை கட்டிய கொள்ளு மிகவும் நல்லது. சாப்பிடச் சொல்வார்கல். கொள்ளை முளைக் கட்டுவதால், அதில் விட்டமின் ஏ, பி மற்றும் சி அதிகரிக்கும்.
கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ பலமுறை கேட்ட முதுமொழி. ஆனால், அர்த்தம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக, இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.
ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.
ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம். நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.
ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு இதை உணவாகக் கொடுத்தனர்.
குதிரைக்கு இது பிரத்யேக உணவு. அதனால்தான், குதிரை கொழுப்புக் கூடாமல் சிக்கென்ற உடல்வாகோடு இருக்கிறது; அதிவேகமாக ஓடுகிறது; இதன் காரணமாகத்தான் இதை, `குதிரைக் கொள்ளு’ என்றும் சொல்கிறார்கள்.
கொதிக்கவைத்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகங்கள், சிறுநீரகப் பாதை போன்ற உள்ளுறுப்புகளில் சேரும் கற்களைக் கரைக்கும்.