LIST OF BEST HYBRID CARS 2023: எலக்ட்ரிக் காரை வாங்க தயங்குபவர்களுக்கான சாய்ஸ் தான் ஹைபிரிட் கார். இவற்றில் ஐ.சி.இ., எனும் இன்டர்னல் கம்பஷன் என்ஜினும் இருக்கும், எலக்ட்ரிக் மோட்டாரை இயக்கக் கூடிய பேட்டரி யூனிட்டும் இருக்கும்.
செயல்திறன் மற்றும் மைலேஜிலும் இவை சிறந்து விளங்குகின்றன. 2023ல் ஹைப்ரிட் காரை வாங்க விருப்புபவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ்கள் இதோ.
மாருதி சுசூகி பலேனோ
LIST OF BEST HYBRID CARS 2023: இந்த ஹேட்ச்பேக் கார் போல்டான டிசைன் மற்றும் சொகுசான ஓட்டுதல் அனுபவத்தை வழங்கக் கூடியது. இதில் டுயல் விவிடி பிஎஸ் 6 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஐடல் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்ட இது, சிக்னல், டிராபிக் போன்றவற்றில் சும்மா நிற்கும் போது என்ஜின் அணைந்துவிடும்.
பிரேக்கை அழுத்தினால் மீண்டும் கிளம்பும். மைலேஜை மனதில் வைத்து இந்த அம்சம் தரப்பட்டுள்ளது. மொபைல் ஆப் இணைப்பு, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, ஹெட் அப் டிஸ்பிளே, எல்.இ.டி., பாக் லேம்ப், 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் உடன் ஈபிடி பிரேக்கிங் தொழில்நுட்பம், ஹில் ஹோல்ட் உதவி ஆகிய அம்சங்கள் கிடைக்கின்றன.
1197 சிசி கொண்ட இதன் என்ஜின் 23 கி.மீ., மைலேஜ் தரும் என மாருதி க்ளைம் செய்கிறது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.7 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
மாருதி சுசூகி சியாஸ்
LIST OF BEST HYBRID CARS 2023: சியாஸில் டெல்டா, ஸ்மார்ட் ஹைபிரிட் சிக்மா, ஸீட்டா மற்றும் ஆல்பா பல ஹைபிரிட் மாடல்கள் உள்ளன. இந்த அனைத்து வகைகளும் ஸ்மார்ட் ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய கே15 பெட்ரோல் எஞ்சினில் இயங்குபவை.
பலேனோவைப் போல இதிலும் ஐடல் ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் உள்ளது. மேலும் க்ரூஸ் கன்ட்ரோல், நெக்ஸா சேப்டி ஷீல்டு ஆகிய அம்சங்களும் உள்ளன.
1490 சிசி என்ஜின் கொண்ட சியாஸ் 20.65 கிலோ மீட்டர் ஒரு லிட்டருக்கு மைலேஜாக தரும் என நிறுவனம் கூறுகிறது. இதன் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலை ரூ.9.2 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
எம்.ஜி.ஹெக்டார் பிளஸ்
LIST OF BEST HYBRID CARS 2023: எம்.ஜி., நிறுவனத்திலிருந்து வரும் பெரிய 7 சீட்டர் கார் தான் இந்த ஹெக்டார் பிளஸ். இது அல்ட்ரா-பிரீமியம் வடிவமைப்பையும், ஸ்மார்ட் அம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த எஸ்.யூ.வி.,யில் 1451 சிசி என்ஜின் உள்ளது.
இது 141 பி.எச்.பி., பவரை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் தான் உள்ளது. கருப்பு, சில்வர் மற்றும் வெள்ளை நிறத்தில் இக்கார் கிடைக்கிறது. ஈ.எஸ்.பி., ஹில் ஹோல்ட் உதவி, ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய அம்சங்களும் இதில் உள்ளன.
இது லிட்டருக்கு 15.58 லிட்டர் மைலேஜ் தரும் என்கின்றனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.17.5 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.
டொயாட்டோ கேம்ரி
LIST OF BEST HYBRID CARS 2023: ஹைபிரிட் கார் வரிசையில் இது பிரீமியம் ரேஞ்ச் செடான். 8வது தலைமுறை கேம்ரியை அறிமுகப்படுத்தியுள்ள டொயோட்டோ பயனரின் சொகுசு மற்றும் ஆடம்பரத்திற்கு என பல வகை வசதிகளை சேர்த்துள்ளது.
இதில் மிகவும் பவர்புல்லான 2498 சிசி என்ஜின் உள்ளது. அது 175 பி.எச்.பி., பவரை தரும். இதில் 8 அங்குல டச் ஸ்க்ரீன், வாய்ஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜிங், ஸ்லீப் டெயில் லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.45 லட்சத்தில் இருந்து ஆரம்பிகிறது.
ஹோண்டா சிட்டி ஹைபிரிட் eHEV
LIST OF BEST HYBRID CARS 2023: இது i-MMD (Intelligent Multi-Mode Drive) எனும் ஹைப்ரிட் பவர்டிரெய்னைக் கொண்டுள்ளது. அதாவது பெட்ரோல் மற்றும் 2 எலக்ட்ரிக் மோட்டார் ஆகியவற்றிலிருந்து பவரை பெறும்.
இதன் மூலம் 108 பி.எச்.பி., பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க்கை உற்பத்தி செய்கிறது. சிவப்பு, வெள்ளை, க்ரே, சில்வர் என பல வண்ணங்களில் இந்த ஹோண்டா சிட்டி கிடைக்கிறது.
1498 சிசி என்ஜின் கொண்ட ஹோண்டா சிட்டி 27.1 கி.மீ., என்ற சூப்பர் மைலேஜை தரும் என நிறுவனம் கூறுகிறது. 6 ஏர்பேக் அமைப்பு, வாகன ஸ்டபிலிட்டி உதவி, ஹில் ஸ்டார்ட் உதவி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.19.89 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகிறது.
மாருதி விட்டாரா பிரெஸ்ஸா
LIST OF BEST HYBRID CARS 2023: ஹைபிரிட் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்காத மாருதி, பல்வேறு வகை ஹைபிரிட் கார்களை கொண்டுள்ளது. அதில் விட்டாரா பிரெஸ்ஸா சிறந்த ஹைப்ரிட் காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்று. விட்டாரா பிரெஸ்ஸா 3 புதிய நிறங்கள் மற்றும் புதிய டூயல்-டோன்களில் கிடைக்கிறது.
1,462 சிசி என்ஜின் கொண்ட இந்த கார் 86 – 101 பி.எச்.பி., பவரை வெளிப்படுத்துகிறது. மைலேஜ் 20 கிலோமீட்டர் என கிளைம் செய்கின்றனர். இதில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உண்டு. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.19 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
டொயோட்டோ இனோவா ஹைகிராஸ்
LIST OF BEST HYBRID CARS 2023: ஹைபிரிட் கார் சந்தையில் புதிய வரவு இந்த இனோவா ஹைகிராஸ். இந்த காரில் ப்ரீ கொலீஷன் அமைப்பு, பேனோரமிக் சன்ரூப், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர் என பல புதிய அம்சங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் உள்ளன. இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதற்கு இணையாக செயல்படும் எலக்ட்ரிக் மோட்டார் உள்ளன.
இது அதிகபட்சமாக 152 பிஎச்பி பவரையும், 187 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 9.5 விநாடிகளில் 0 – 100 கி.மீ., வேகத்தை எட்டும். லிட்டருக்கு இந்த கார் 23.24 கி.மீ., மைலேஜ் தரும் என்கின்றனர். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.18.55 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது.