MAPLE SYRUP BENEFITS IN TAMIL 2023: மேப்பல் சிரப்

0
524
MAPLE SYRUP BENEFITS IN TAMIL
MAPLE SYRUP BENEFITS IN TAMIL

MAPLE SYRUP BENEFITS IN TAMIL: மேப்பல் என்னும் மரத்தில் இருந்து எடுக்கப்படும் இனிப்புச்சுவை கொண்ட உணவுப்பொருள் மேப்பல் சிரப்.

கிழக்கு கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருந்தே உலகின் 80 சதவீத மேப்பல் சிரப் தயாராகிறது. வயதான மேப்பல் மரத்தினைக் கீறி அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை உலர்த்தி வடிகட்டி எடுக்கப்படுவது தான் மேப்பல் சிரப்.

ANXIETY MEANING IN TAMIL 2023: அன்ஸிட்டி என்பதன் தமிழ் அர்த்தம் என்ன?

இது அமெரிக்கா, கனடா மற்றும் இதர ஆசிய நாடுகளில் உணவுகளில் இனிப்புச்சுவை சேர்க்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியப் பலன்கள்

MAPLE SYRUP BENEFITS IN TAMIL: உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக மேப்பல் சிரப் சில மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உடல்நலம் காக்கப்படும். மேப்பல் சிரப்பிலும் சுக்ரோஸ் எனப்படும் இனிப்பு மூலக் கூறுகள் உள்ளன. எனவே இவற்றை அதிகமாக சாப்பிடக்கூடாது.
குறைந்த அளவு கலந்துகொள்வது நல்லது. கால்சியம், பொட்டாசியம், இரும்பு, ஜிங்க், மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்கள் மேப்பல் சிரப்பில் உள்ளன. மேலும் உடலுக்கு நன்மை சேர்க்கும் பலவித ஆன்டி ஆக்ஸிடண்ட்களும் இதில் உள்ளன.
உடற்பருமனானவர்கள், டயட் மற்றும் ஜிம் பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், நீரிழிவு கொண்டவர்கள் மேப்பல் சிரப் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
குழந்தைகள், பருவ வயதினர் இதனை தினமும் காலை குறைந்த அளவு சாப்பிடலாம். இதனால் வளரும் குழந்தைகளுக்கு பல்வேறு ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.