MEDICINAL LEECH THERAPY: அட்டைப் பூச்சி தெரபியால் குணமாகும் நோய்கள்

0
640
MEDICINAL LEECH THERAPY

MEDICINAL LEECH THERAPY

MEDICINAL LEECH THERAPY: அட்டைப் பூச்சி தெரபியால் குணமாகும் நோய்கள்: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் உடல்நலம் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

உடலில் பல்வேறு நோய்களுக்கும், பாதிப்புகளுக்கும் பல தெரபி முறைகளை கையாண்டு குணப்படுத்துகிறார்கள். கால்களை சுத்தப்படுத்த கூட மீன்களை வைத்து சுத்தப்படுத்தும் தெரபி முறை சமீபமாக பரவலாக உள்ளது. அதுபோல அட்டைப்பூச்சிகளை கொண்டு அளிக்கப்படும் ஹிருடோ தெரபி (Hirudo Therapy) பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம்.. அட்டைப்பூச்சிகள் என்றாலே ரத்தம் உறிஞ்சும் அருவருக்கத்தக்க உயிரினமாகவே பொதுவாக பார்க்கப்படுகிறது. ஆனால் சில உடல்நல பாதிப்புகளை சரி செய்வதில் அட்டைப்பூச்சிகளுக்கு நிகரில்லை என்கிறார்கள் சித்த மருத்துவர்கள் சிலர். அட்டைப்பூச்சியை கொண்டு செய்யப்படும் ஹிருடோ தெரபி (Hirudo Therapy or Leeches therapy) முறை தற்போது பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 19ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்திலேயே பண்டைய மக்களிடம் இந்த சிகிச்சை முறை இருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு வகையான மருத்துவங்களுக்கு இந்த அட்டைப்பூச்சி தெரபி பயன்படுகிறது.

உடலில் உள்ள ரத்தக்கட்டிகளை கரைக்கவும், இதயநோய்களுக்கு இந்த தெரபி பயன்படுத்தப்படுகிறது. முகத்தில் ஏற்படும் பருவை நீக்க, தலையில் முடி வளர்வதற்கு அட்டைப்பூச்சி தெரபி பயன்படுத்தப்படுகிறது.
அட்டைப்பூச்சியின் எச்சில் ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதால் ரத்த ஓட்டம் சீராவதற்கும், ஆறாத புண்களை ஆற்றுவதற்கு இந்த தெரபி முறை செய்யப்படுகிறது.
அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் காயங்களை குணப்படுத்தவும், உடலில் செல் இறப்பு அதிகமாக இருந்தால் அவற்றை தூண்டவும் இந்த தெரபி முறையை பயன்படுத்துகின்றனர்.
இந்த தெரபி முறையில் அதிகபட்சம் அரை மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்ப உடலின் குறிப்பிட்ட பகுதியில் இந்த அட்டைப்பூச்சிகள் விடப்படுகின்றன.