ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

2
627
ஆஸ்கார் விருது 2023: OSCAR AWARDS 2023 IN TAMIL

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் ஆஸ்கார் விருது 2023 தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: நாம் ஒவ்வொருவரும் திரைப்படத்திலோ இணையதளத்திலோ ஏதாவது ஒரு வகையில் “ஹாலிவுட்” என்ற எழுத்துகளை லாஸ் ஏஞ்சல்ஸ் மலை மீது பார்த்திருப்போம்.

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

அங்கிருந்து சில மைல் தொலைவில் உள்ள டால்ஃபி திரையரங்குக்கு ஆண்டுதோறும் ‘தி ஆஸ்கர்’ எனப்படும் அகாடெமி விருதுகளுக்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.

To Know More About – TNPSC PHOTO COMPRESSOR

1927ஆம் ஆண்டில், அகாடெமி ஆஃப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. 1928ஆம் ஆண்டில், அந்தக் குழு தனது அகாடெமி விருதுகளை முதன்முறையாக வழங்கியது.

இன்று அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பிற திரைப்பட தயாரிப்பாளர்கள் உட்பட 9,000க்கும் மேற்பட்டோர் அகாடெமியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

யாரும் எளிதில் இங்கு உறுப்பினராக முடியாது. அதற்கு சினிமாவில், இயக்குதல், நடிப்பு, எழுத்து, இசை என்று உறுப்பினராக விரும்பும் நபர் தங்களுடைய பிரிவில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களில் இதில் உறுப்பினர் ஆவதற்கு அகாடெமி தான் அழைப்பு விடுக்கிறது.

யாரும் தாமாக அதற்கு விண்ணப்பித்துச் சேர்ந்துவிட முடியாது. ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரையில் இடம் பெறுபவர்களுக்கு மட்டும் அகாடெமியே உறுப்பினர் ஆவதற்கான அழைப்பை அனுப்புகிறது.

சரி, ஏன் இந்த அகாடெமி விருதுகள் ஆஸ்கர் என்று அழைக்கப்படுகின்றன?

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: அகாடெமி விருதில் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் கோப்பை ஆஸ்கர் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பெயர் உண்மையில் எப்படி வந்தது என்பதற்குப் பல கதைகள் உள்ளன. ஆனால், எதையும் உறுதியாகக் கூறுவது கடினம்.

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL
ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

ஆஸ்கர் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகின்றன?

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் இதுபோன்ற லட்சக்கணக்கான திரைப்படங்கள் உலகம் முழுவதுமே வெளியாகின்றன.

நிபந்தனைகள்

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: ஆஸ்கர் விருதுக்கு ஒரு படம் பரிந்துரைக்கப்படுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன.

  • படம் குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது இருக்க வேண்டும்
  • லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எந்த திரையரங்கிலாவது குறைந்தது 7 நாட்களாவது ஓடியிருக்க வேண்டும்
  • ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்பு எந்த ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டிருக்கக்கூடாது.
  • ஒவ்வொரு நாடும் ஒரு பிரிவுக்கு ஒரு படத்தை மட்டுமே அனுப்ப முடியும். இந்த நிபந்தனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்கள் நடிகர்களின் பெயர்களுடன் அகாடெமிக்கு ஒரு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். அதிலிருந்து பரிந்துரைகளுக்குத் தகுதியான படங்களின் பட்டியலை அகாடெமி வெளியிடுகிறது.
  • இதில் உலகம் முழுவதும் இருந்து தகுதி பெற்ற 400 திரைப்படங்கள் அடங்கும். அகாடெமி உறுப்பினர்கள் இறுதியாக 5 பேரைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து இறுதி வெற்றியாளரை அறிவிக்கின்றனர்.
ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL
ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

வெற்றியாளர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்?

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL அகாடெமி ஆஃப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸின் உறுப்பினர்கள் திரைப்படத் துறையில் அவர்களது பணியின் அடிப்படையில் 17 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள்.

நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள், ஆவணப்பட தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், ஒலி வடிவமைப்பாளர்கள், காட்சி விளைவுகள் எனப் பல்வேறு பிரிவுகள் அதில் அடக்கம். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் யாரையும் வைக்க முடியாது.

இந்த 17 பிரிவுகளில் உள்ள மொத்த உறுப்பினர் கலைஞர்களில் சில கலைஞர்களைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் நடுவர் குழு அமைக்கப்படுகிறது. இந்த நடுவர் குழு உறுப்பினர்களின் இறுதிப் பட்டியல் கடைசி வரை அறிவிக்கப்படுவதில்லை.

இந்த நடுவர் குழு உறுப்பினர்கள் அந்தந்தத் துறைகளில் 20க்கும் மேற்பட்ட பிரிவுகளில் இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதாவது நடுவர் குழுவின் நடிகர் பிரிவு உறுப்பினர்கள் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் அல்லது நடிகை விருதுகளுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும்.

இசைக்கலைஞர்களின் நடுவர் குழு சிறந்த பாடல், சிறந்த பின்னணி இசை ஆகியவற்றை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

இந்த வாக்குகளின் அடிப்படையில், இறுதி 5 பரிந்துரைகளில் அதிக வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுவார்.

அனைத்து உறுப்பினர்களும் ஒரேயொரு விருதுக்கு மட்டுமே வாக்களிக்க முடியும். இதற்காக முன்னுரிமை வாக்கு முறைமை என்ற முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் நடுவர் குழு உறுப்பினர்கள் விருப்பப்படி வாக்களிக்க வேண்டும். ஒரு பிரிவில் 10 பரிந்துரைகள் உள்ளன என்றால் அதில் யார் பாதிக்கும் மேலான வாக்குகளைப் பெறுகிறாரோ அவருடைய படம் வெற்றி பெறுகிறது.

ஆரம்பத்தில் ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, ஹெச், ஐ, ஜே எனப் பத்து திரைப்படங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் நடுவர் குழு உறுப்பினர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இந்தத் திரைப்படங்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இந்தத் திரைப்படங்களில் ஏதேனும் ஒன்று 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றால், அந்தப் படம் இயல்பாகவே சிறந்த படமாக மாறும். ஆனால், வாக்குகள் அத்தகைய தெளிவான முடிவைக் கொடுக்கவில்லை என்றால், குறைந்த வாக்குகளைப் பெற்ற படங்கள் முதலில் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதற்குப் பிறகு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற படத்திற்கு அந்த வாக்குகள் மாற்றப்படும்.

ஒருவேளை உறுப்பினர் ஒருவர் ‘சி’ திரைப்படத்திற்குத் தனது வாக்கை வழங்கியுள்ளார் என வைத்துக்கொள்வோம். ஆனால், அது குறைந்த வாக்குகளைப் பெற்ற படமாக நீக்கப்பட்டுவிட்டது என்றால், அதே உறுப்பினருடைய வாக்கு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற படத்திற்கு மாற்றப்படும்.

இதைச் செய்வதன்மூலம் எந்தப் படமும் பெரும்பான்மை வாக்குகளை எட்டாமல், அதேவேளையில் குறைந்த வாக்குகளைப் பெற்ற படங்களும் அகற்றப்படுகின்றன. அதற்குப் பிறகு இறுதியாக ஆஸ்கர் விருதுக்கான வெற்றியாளர் தேர்வு செய்யப்படுகிறார்.

ஆஸ்கர் விழாவில் சர்ச்சைகளும் விமர்சனங்களும்

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை முகத்தில் குத்திய தருணம் உங்களுக்கு நினைவிருக்கலாம். அகாடெமி விருதுகள் சர்ச்சைக்குள்ளானது அதுவே முதல் முறையல்ல.

2016ஆம் ஆண்டில், ஆஸ்கர் விழாவின் மிக முக்கியமான தருணம், சிறந்த படத்திற்கான விருது தவறாக அறிவிக்கப்பட்டது. விருதுக்கு அறிவிக்கப்பட்ட பெயர் லாலா லேண்ட். ஆனால், வெற்றி பெற்றது மூன்லைட்.

இதுமட்டுமின்றி, அகாடெமி வெள்ளை இனத்தவருக்குச் சாதகமாக இருப்பதாக அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. #OscarsSoWhite என்ற ஹேஷ்டேக் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் ஓர் இயக்கமாக இருந்து வருகிறது. இதன் விளைவாக இன்று அகாடெமியில் மட்டுமல்ல, பரிந்துரைகளிலும் அதிக பன்முகத்தன்மை உள்ளது.

அதனால்தான் 2020ஆம் ஆண்டில் சிறந்த படத்திற்கான விருதை வென்ற முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற பெருமையை கொரிய மொழி திரைப்படமான ‘தி பேரசைட்’ பெற்றது.

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL
ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

ஆஸ்கர் விழாவில் இந்தியா

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL 2009ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றார் தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்

ஏஆர்.ரஹ்மானின் ‘ஜெய் ஹோ’ மற்றும் ஆஸ்கர் மேடையில் அவர் தமிழில் பேசியதும்தான் ஆஸ்கர் என்றதும் முதலில் நினைவுக்கு வரும். உண்மையில் 2009இல், ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் ஒரு வரலாற்றை உருவாக்கியது. ஒரே ஆண்டில் 4 ஆஸ்கர் விருதுகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது.

சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடலுக்கான விருதுகளை ஏஆர்.ரஹ்மான் வென்றார். அதே பாடலுக்காக குல்சாருக்கும் இணை விருது வழங்கப்பட்டது. மேலும் ரசூல் பூக்குட்டி, ரிச்சர்ட் பைக் மற்றும் இயன் டாப் ஆகியோர் சிறந்த ஒலி கலவைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றனர்.

1983இல் ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் பானு அத்தையா. அதைத் தொடர்ந்து 1992இல் சினிமாவுக்காக ஆற்றிய பங்களிப்பிற்காக சத்யஜித் ரே ஆஸ்கர் விருது பெற்றார்.

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL
ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

ஆஸ்கார் விருது பெயர் காரணம்

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: பெரும்பாலானோருக்கு ஆஸ்கார் விருது என்கிற பெயர் தான் தெரியும். ஆனால் அவ்விருதுக்கு இது உண்மையான பெயர் அல்ல.

இதன் உண்மையான மற்றும் அதிகாரப்பூர்வ பெயர் அகாடமி விருது மெரிட். அகாடமியின் நிர்வாக இயக்குநரான மார்கரெட் ஹெரிக், இந்த விருதின் வடிவத்தை பார்க்கும் போது அது தனது உறவினர் ஆஸ்கார் என்பவரை நினைவூட்டுவதாக கூறினாராம், அதன்பின்னரே இதனை ஆஸ்கார் விருது என செல்லமாக அழைத்து வருகின்றனர்.

முதல் ஆஸ்கார் விருது விழா, கடந்த 1929 ஆம் ஆண்டு ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், இந்த நிகழ்வுக்கான டிக்கெட் வெறும் 5 டாலர் மட்டுமே. முதல் ஆஸ்கர் விருது விழா வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்கார் விருது தொடர்பான மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், இந்த விருதை வெல்லும் வெற்றியாளருக்கு அதில் முழு உரிமை இல்லை.

விருது வழங்கப்படுவதற்கு முன்பு, அவர் தனது விருதை எங்கும் விற்க முடியாது என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமாம். அதுமட்டுமல்லாமல், வெற்றியாளர் தனது விருதினை அகாடமிக்கு மட்டுமே விற்க முடியும். அதுவும் 1 டாலருக்கு தான். இந்த விதி 1950-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

ஆஸ்கார் விருது தொடர்பான மற்றுமொரு விசித்திரமான தகவல் என்னவென்றால், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலோகத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக, ஆஸ்கார் விருதை பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு அதன் மீது வர்ணம் பூசப்பட்டு அது வெற்றியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது.

ஹாலிவுட் நடிகர் கெவின் ஓ கானல் என்பவர் தான் ஆஸ்கார் வரலாற்றில் மிகப்பெரிய துரதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார். ஏனெனில், அவர் கிட்டத்தட்ட 20 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அவரால் ஒரு முறை கூட விருதை வெல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு துரதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறார்.

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL
ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL

அகாடமி விருது 2023 / 95வது ஆஸ்கர் விருது 2023

ஆஸ்கார் விருது 2023: OSCARS AWARDS 2023 IN TAMIL: காடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட, விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல்.

  • அனிமேஷன் அம்சம் – கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ – வெற்றியாளர்!
    துணை நடிகர் – கே ஹுய் குவான், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் எல்லாம் – வெற்றியாளர்!
  • துணை நடிகை – ஜேமி லீ கர்டிஸ், எல்லா இடங்களிலும் உள்ள அனைத்தும் ஒரே நேரத்தில் – வெற்றியாளர்!
    ஸ்டெபானி ஹ்சு, எல்லா இடங்களிலும் எல்லாம் ஒரே நேரத்தில்
  • ஆவணப்பட அம்சம் – நவல்னி – வெற்றியாளர்!
  • நேரடி – நடவடிக்கை குறுகிய / Live-action short – ஒரு ஐரிஷ் குட்பை – வெற்றியாளர்!
    ஒளிப்பதிவு – மேற்கு முன்னணியில் அனைத்து அமைதி – வெற்றியாளர்!
    ஒப்பனை மற்றும் முடி – திமிங்கிலம் – வெற்றியாளர்!
  • ஆடை வடிவமைப்பு – பிளாக் பாந்தர்: வகாண்டா என்றென்றும் – வெற்றியாளர்!
    சர்வதேச திரைப்படம் – மேற்கு முன்னணியில் அனைத்து அமைதி – வெற்றியாளர்!
    சிறு ஆவணப்படம் – யானை விஸ்பரர்கள் – வெற்றியாளர்!
    அனிமேஷன் குறும்படம் – சிறுவன், மச்சம், நரி மற்றும் குதிரை – வெற்றியாளர்!
    தயாரிப்பு வடிவமைப்பு – மேற்கு முன்னணியில் அனைத்து அமைதி – வெற்றியாளர்!
    அசல் மதிப்பெண் / ORIGINAL SCORE – மேற்கு முன்னணியில் அனைத்து அமைதி – வெற்றியாளர்!
    காட்சி விளைவுகள் – அவதார்: தி வே ஆஃப் வாட்டர் – வின்னர்!
    அசல் திரைக்கதை – எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் – வெற்றியாளர்!
    தழுவிய திரைக்கதை – பேசும் பெண்கள் – வெற்றியாளர்!
  • ஒலி- டாப் கன்: மேவரிக் – வின்னர்!
  • அசல் பாடல் – நாட்டு நாடு, RRR – வின்னர்!
    எடிட்டிங் – எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் – வெற்றியாளர்!
    இயக்குனர் – டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட், எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் – வெற்றியாளர்!
    முன்னணி நடிகர் 0 பிரெண்டன் ஃப்ரேசர், தி வேல் _ வின்னர்!
    முன்னணி நடிகை – மைக்கேல் யோ, எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் எல்லாம் – வெற்றியாளர்!
  • சிறந்த படம் – எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் – வெற்றியாளர்!
    ஃபேபல்மேன்ஸ்
    முதல் ஆஸ்கர் விருதாக சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது ‘கில்லர்மோ டெல் டோரோவின் பினோக்கியோ’ திரைப்படம்.
  • இதேபோல், Everything All At Once படத்தில் நடித்த கி ஹு ஹுவான் சிறந்த துணை நடிகர் பிரிவிலும், ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகை பிரிவிலும் ஆஸ்கர் விருதினை வென்றனர்.
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான ஆஸ்கர் விருது ஆல் கொயட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet on the Western Front) படத்திற்காக ஜேம்ஸ் ஃப்ரெண்ட்க்கு வழங்கப்பட்டது.
  • சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘ஆன் ஐரிஷ் குட்பை’ (An Irish Goodbye) படம் வென்றது.
  • இந்த ஆண்டின் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது ‘நவால்னி’ (Navalny) படத்துக்கு வழங்கப்பட்டது. இதேபிரிவில் இடம்பெற்ற இந்திய திரைப்படமான ஆர் தட் ப்ரீத்ஸ் படம் ஆஸ்கர் விருது வெல்லவில்லை.
  • சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கர் விருது ‘தி வேல்’ படத்திற்கு கிடைத்தது.