PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: ஆம் ஆத்மி எம்.பி – பரினீதி சோப்ரா நிச்சயதார்த்தம் முடிந்தது!

0
435
PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர் பரினீதி சோப்ரா. இவருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியுமான ராகவ் சத்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும் இவர்கள் பல நாட்களாக டேட்டிங்க செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

இதையடுத்து, பரினீதியும் ராகவ்வும் தங்களது காதல் வதந்திகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP

பரினீதி-ராகவ் நிச்சயதார்த்தம்

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: பாலிவுட் திரையுலகில் நடிகை என்பதை தாண்டி இசையமைப்பாளராகவும் பாடகராகவும் பன்முகத்திறமைகளை காண்பித்து வருபவர் பரினீதி சோப்ரா.
இவரும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பியுமான ராகவ் சத்தாவும் காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், பரினீதி-ராகவ் சத்தாவின் நிச்சயதார்த்தம் நேற்று நடைப்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள கபுர்தலா ஹவுசில் நடைப்பெற்றுள்ளது.
இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில் குறைவான நபர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்கள் இருவரும் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர்.

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP

“நான் வேண்டியது கிடைத்துவிட்டது..”

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: பரினீதி சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில், நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
பரினீதி, ராகவ்வுடன் கையுடன் கை கோர்த்து இருப்பது பின்பு அவர் தோளில் சாய்து கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் பரினீதியின் பதிவில் இடம் பெற்றுள்ளன. “இதற்காகத்தான் நான் இத்தனை நாட்கள் வேண்டினேன்..” என தனது பதிவிற்கு கீழே அழகான கேப்ஷனை எழுதியுள்ளார் பரினீதி.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் மணமகள்-மணமகன் ஏதாவது ஒரு நிறத்தை தேர்வு செய்து அதன்படியே நிகழ்ச்சி முழுவதும் அலங்காரம் செய்கின்றனர். ஒரே நிறத்திலேயே உடை உடுத்தி ட்வின்னிங்கும் செய்கின்றனர். பரினீதியும்-ராகவ்வும் அப்படித்தான் வெள்ளை நிற உடையில் தங்களது நிச்சயதார்தத்தை முடித்துக்கொண்டுள்ளனர்.

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP

பிரபலங்கள்-அரசியல் தலைவர்கள் வாழ்த்து

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: ராகவ் சத்தா அரசியலில் பெரிய கை என்பதால், சில அரசியல் பிரமுகர்கள் மட்டும் அவரது திருமண நிச்சயதார்த்தத்தில் நேரில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் ப.சிதம்பரம், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மன மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP

வாழ்த்து தெரிவித்த பாலிவுட் பிரபலங்கள்

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மா, “வாழ்த்துகள்” என பரினீதி சோப்ராவின் போட்டோக்களின் கமெண்ட் செக்ஷனில் தனது வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரன்வீர் சிங்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இவர்களைத்தவிர கபில் ஷர்மா, அனுபம் கெர், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, மனமக்களை நேரில் வாழ்த்தியதோடு இல்லாது அவர்களது புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP

விரைவில் திருமணம்?

PARINEETI CHOPRA ENGAGED WITH AAM AADMI MP 2023: நிச்சயதார்த்தம் முடித்த கையோடு பரினீதி-ராகவ் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் கரண் ஜோஹர், சானியா மிர்ஸா, ஷாருக்கான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்காக கைதேர்ந்த சமையல் வல்லுநர்களை அழைத்து சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.