Samyuktha Vishnukanth Instagram Live 2023: சம்யுக்தா – விஷ்ணுகாந்த் இன்ஸ்டாகிராம் லைவ்

2
522
Samyuktha Vishnukanth Instagram Live 2
Samyuktha Vishnukanth Instagram Live 2

Samyuktha Vishnukanth Instagram Live 2023: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாவம் கணேசன்’, ‘சிப்பிக்குள் முத்து’ ஆகிய சீரியல்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா.

அவர் ‘சிப்பிக்குள் முத்து சீரியலில்’ நடித்த நடிகர் விஷ்ணுகாந்தை திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடந்தது.
இதனிடையே, சின்னத்திரை நடிகை சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இருவரும் இன்ஸ்டாகிராமில் இருந்து தங்களது திருமண புகைப்படத்தை நீக்கியதால் இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.
இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் விஷ்ணுகாந்த் நேர்காணல் கொடுத்தார். அதற்கு சம்யுக்தா இன்ஸ்டாகிராம் லைவில் பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஷ்ணுகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ” இவனை முடக்க வேண்டும். இவனை வெளியே விடக்கூடாது என்று பயங்கரமாக பிளான் செய்து பண்ணுவது போல நீங்கள் செய்கிறீர்கள்.
Samyuktha Vishnukanth Instagram Live 1
Samyuktha Vishnukanth Instagram Live 1
நான் லைவ் வருகிறேன் என்று சொன்னேன். அதற்குள் நீங்கள் ஏன் லைவ் வந்தீர்கள். இந்த மாதிரியான கட்டத்திற்கு பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவு நாள் பொறுமையாக எல்லோருடைய ஆலோசனைகளை கேட்டு பொறுமையாக இருந்தேன்.
Samyuktha Vishnukanth Instagram Live 2023: நான் இப்போதும் பொறுமையாகத்தான் இருக்கிறேன். நான் நேர்காணல் கொடுத்ததற்கான காரணமே சோசியல் மீடியாவில் எங்கள் பிரிவுக்கு தேவையில்லாத காரணங்களை சிலர் சொல்லி இருந்தார்கள். அதற்கு விளக்கம் கொடுப்பதற்க்காகத்தான் நான் நேர்காணல் கொடுத்தேன்.
நேர்காணலில் கூட நிறைய உண்மைகளை சொல்லாமல் ஏன் சம்யுக்தா என்னை விட்டுப் போனார் என்பதற்கான காரணத்தை மட்டும் நான் சொல்லியிருந்தேன். அதில் முக்கியமாக நான் சொன்னது சம்யுக்தா தவறான பாதையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்பது.
அதன் பின்னர் சம்யுக்தா இன்ஸ்டாகிராமில் லைவ் வந்திருக்கிறார். அதை பார்க்கவே இல்லை. என்னுடைய நண்பர்கள்தான் அதை எனக்கு எடுத்து அனுப்பினார்கள். அதை பார்க்கும் பொழுது எனக்கு உண்மையாகவே கஷ்டமாக இருந்தது. அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்றால் எனக்கு கொலை மிரட்டல் மட்டும்தான் விடவில்லை. மத்த எல்லா மிரட்டல்களையும் விடுத்துவிட்டார்.
அந்த லைவில் சம்யுக்தா நான் அவரது சித்தியை மிரட்டியதாக சொல்லி இருக்கிறார். நான் ஏன் அவரை மிரட்ட வேண்டும். உண்மையில் நான் அவரது சித்தி மிரட்டவே இல்லை.
அவர்களைப் பற்றி ஏதோ ஒரு வீடியோவை நான் போடப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். எனக்கு வேலை இல்லையா.. நான் என்ன படமா எடுக்கிறேன். அவர் பேசியது என் மனதை மிகவும் காயப்படுத்தி விட்டது.
Samyuktha Vishnukanth Instagram Live 2023: இன்னொன்று போலீசை நான் மிரட்டியாக சொல்கிறார்கள் போலீசை எப்படி மிரட்ட முடியும்? நான் போலீஸிடம் சம்மன் வந்ததும் ஓடி ஒளிந்ததாக சொல்லி இருக்கிறார். ஓடி ஒளிவதற்கு நான் தவறு பண்ண வில்லையே..
சம்யுக்தா சொன்னது எல்லாமே தவறு. அவள் தவறான பாதையில் சிக்கி இருக்கிறாள் என்பதற்கான சான்று அவள் அன்று இன்ஸ்டாகிராமில் வந்த லைவ்…
என்னிடம் இருக்கக்கூடிய சான்றுகள் எல்லாத்தையும் நான் வெளியே விட்டால் உங்கள் வாழ்க்கையே காலி ஆகிவிடும். 24 மணி நேரமும் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறீர்கள். கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எந்த ஒரு மனிதனாலும் அப்படி இருக்க முடியாது… எனக்கு அந்த ஆடியோவை ரிலீஸ் பண்ண ரொம்ப நேரம் ஆகாது..” என்று பேசினார்.