2023 சந்திர கிரகணத்தில் செய்ய வேண்டியவை? செய்யக்கூடாதவை? கர்ப்பிணிகளுக்கு ஆபத்தா?

0
778

SANTHIRA KIRAKANATHIL SEYYA VENDIYAVAI: சந்திர கிரகண நேரத்தில் சாப்பிடலாமா ? கூடாதா? கர்ப்பிணிகள் படுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சமைத்த சாப்பாடு மீதமானால் கிரகண நேரத்திற்கு பிறகு சாப்பிடக்கூடாது.

கர்ப்பிணிகள் என்றால் வீட்டை விட்டே வெளியில் போகக் கூடாது என பல்வேறு பயமுறுத்தல்கள். அறிவுறுத்தல்கள். என்னவெல்லாம் செய்யக் கூடாது? என்ன செய்யலாம்… முதலில் பதட்டமும், பயமும் கூடாது.

புத்தியில் குழப்பம் நேரிடும். ஆனாலும் பதற்றமடையாதீர்கள். ஏனெனில், கிரகணம் என்றாலே, இயல்பாக அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக் கொள்கிறது.

அதுவும் சந்திர கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர், சில இணையதளங்கள், பத்திரிக்கைகளுமே கூட கூறி வருகின்றன.

உண்மையில் சந்திர கிரகணம், மனிதனுக்கு பேராபத்தை தான் தருகிறதா? இன்று சந்திர கிரகணம் நிகழவுள்ள நிலையில், கிரகணத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கிரகண சமயத்தில் சந்திரனில் எந்தவொரு சிறப்பு மாற்றமும் ஏற்படுவதில்லை. எப்போதும் போல நாற்புறமும் தன் ஒளியை வீசிக் கொண்டு தான் இருக்கிறது. வேறு எந்த சிறப்பு மர்ம கதிர்களும் வெளிப்படுவது இல்லை. கிரகணத்தின் போது எந்தவித சிறப்பு கதிர்களும் பூமியில் வருவதில்லை.

கிரகணத்தின் போது உண்பதால் பிரச்சினைகள் ஏற்படும் என்பதற்கு எந்தவித அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. கிரகணத்தின் போது பறவைகள் உணவு உண்கின்றன. ஆடு, மாடுகள் புல்லை மேய்கின்றன அவைகளுக்கு எந்தவித தீங்கும் ஏற்படுவதில்லை. எனவே வதந்திகளை நம்பாமல் தாராளமாக உணவை உட்கொண்டு மகிழுங்கள்.

ஆனால், அது எளிய உணவாக இருக்கட்டும். செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்காக நம் முன்னோர்கள் கிரகண நேரத்தில் உணவைத் தவிர்க்க சொன்னார்கள்.

பூமி இருக்கும் திசையில் இடையில் நிலவு வந்து மறைத்து விடுவதால் பூமியில் சில பகுதிகளில் சந்திரனின் முகம் மறைக்கப்படுகிறது. அந்த பகுதியில் மட்டும் கிரகணம் தென்படும்.உலகில் வேறெங்கும் கிரகணத்தைக் கண்டு கர்ப்பிணிப் பெண்கள் ஓடி ஒளிந்துக் கொள்வதில்லை.

அங்கெல்லாம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை. கருக்கொண்ட பூச்சிகள் முதல் விலங்குகள் வரை அதன் போக்கில் கிரகணத்தின் போது வெளியே திரிந்து கொண்டு தான் உள்ளன. அவற்றுக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படுவதில்லை.

சூரிய, சந்திர கிரகணம் என்பது அற்புதமான வாணக்காட்சி. இயற்கையின் இந்த விளையாட்டைப் பாதுகாப்பாக கண்டு களிக்க வேண்டும். வெறும் நிழலைக் கண்டு அச்சப்படுவது அறிவியலுக்கு முரணானது.