TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024

0
592
TAMILNADU BUDGET 2023 - 2024

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: தமிழ்நாடி சட்டப்பேரவையில் 2023 – 2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள் ஒர் பார்வை

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: திருக்குறளை வாசித்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

“கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி” என்ற திருக்குறளைக் குறிப்பிட்டு நிதியமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

To Know More About – BLOGANGLE

சபாநாயகர் அப்பாவு பட்ஜெட் வாசித்த பின்னர் அதில் நிறை, குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் . இப்போது அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

TAMILNADU BUDGET 2023 - 2024
TAMILNADU BUDGET 2023 – 2024

ஆனாலும் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பட்ஜெட் வாசிக்கப்படும் போது பட்ஜெட் உரையை தவிர வேறு எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது என்று கூறினார். இதனையடுத்து அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நிதி நெருக்கடியிலும் மிகக்கடினமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வருவாய் பற்றாக்குறையை ₹30,000 கோடியாக குறைத்துள்ளோம். வரும் ஆண்டுகளில் இது மேலும் குறைக்கப்படும்

உக்ரைன் போர், உலகளாவிய நிதி நெருக்கடிகள் காரணமாக வரும் ஆண்டில் நிதி ரீதியாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 நகரங்களில் நடத்தப்படும்.

அம்பேத்கர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும்.

TAMILNADU BUDGET 2023 - 2024
TAMILNADU BUDGET 2023 – 2024

மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.223 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு 3959 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

சென்னை கிண்டியில் கருணாநிதி பெயரில் இந்த ஆண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கப்படும்.

மருத்துவத் துறைக்கு ரூ.18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கான கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்.

வரும் நிதியாண்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும். ரூ.120 கோடி செலவலி சென்னை அம்பத்தூரில் உலகளாவிய தொழில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

மதுரையில் உள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

உயர்கல்வித் துறைக்கு ரூ.6967 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குத் தயாராக 1000 மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.3513 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவாக்கம செய்யப்படுகிறது. இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

TAMILNADU BUDGET 2023 - 2024

நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ₹11 கோடி ஒதுக்கீடு

வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்

முன்னாள் படைவீரர்கள் நலன்: போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ₹20 லட்சம் நிதியுதவி ₹40 லட்சமாக அதிகரிப்பு

வருவாய் பற்றாக்குறை

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: தமிழக அரசின் 2023-24ம் நிதியாண்டுக்கான படஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

TAMILNADU BUDGET 2023 - 2024
TAMILNADU BUDGET 2023 – 2024

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய நிதியமைச்சர், தேசிய அளவோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு அதிக பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை வரும் ஆண்டுகளில் மேலும் குறைக்கப்படும்.

தமிழ்நாடு பட்ஜெட் 2023 – 2024 எதிர்பார்ப்பு / TAMILNADU BUDGET 2023 – 2024

வருவாய் பற்றாக்குறை ரூ.68,000 கோடியில் இருந்து ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. பல திட்டங்களை செயல்படுத்தும்போது பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஒட்டுமொத்த வருவாய் மதிப்பில் வரு வருவாய் 5.58% குறைந்ததே வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கடந்த 2 ஆண்டுகளில் அரசு எடுத்த முயற்சி காரணமாக ஜிடிபியில் 6.9% வரி வருவாய் உயர்ந்துள்ளன எனவும் குறிப்பிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும்.

1,000 புதிய பேருந்துகள் கொள்முதல் மற்றும் மேலும் 500 பேருந்துகளை புதுப்பிக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: ஒவ்வொரு ஆண்டும், 1000 சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வுகளுக்குத் தயாராக 10 மாதங்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 25,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கு ரூ.10 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

சிவில் சர்வீஸ் விண்ணப்பதாரர்கள் மெயின் தேர்வுக்கு தயார் செய்ய மாதாந்திர உதவித்தொகையாக ரூ.7,000 வழங்கப்படும்.

கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ரூ8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சியில் பொதுக் கழிப்பறையின் வெற்றியின் அடிப்படையில் பொதுக் கழிப்பறைகளைப் பராமரிக்கும் திட்டம் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். சென்னை மாநகராட்சி இரண்டு மண்டலங்களில் ரூ.430 கோடி செலவில் கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைத்துள்ளது

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் ரயில்வே போக்குவரத்து பங்களிப்பு குறைவாக உள்ளதாகவும் இதனை சரி செய்ய, ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து புதிய வழித்தடங்களை உருவாக்க புதிய அரசு நிறுவனம் உருவாக்கப்படும்.

வட சென்னை வளர்ச்சித்திட்டம் ரூ.1000 கோடி செலவில் அடுத்த 3 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் ரூ.621 கோடியில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும் என்றும் சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.

TAMILNADU BUDGET 2023 - 2024

சென்னை கண்ணகி நகர், பெரும்பாக்கம், நாவலூர், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள மீள்குடியேற்ற காலனிகளில் 20 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளது.

சென்னையில் ரூ.320 கோடி செலவில் வெள்ளத்தடுப்பு, நீர் வழித்தட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஏபிசி திட்டத்தை வலுப்படுத்தவும், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மற்றும் மதுரைக்கு ‘எழில்மிகு கோயம்புத்தூர் மற்றும் மதுரை’ என்ற தலைப்பில் திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் தொடங்கப்படும்.

அடையாறு-கூவம் ஆறுகளின் 44 கிமீ நீளத்தை அழகுபடுத்தும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் ரூ.1,500 செலவில் மேற்கொள்ளப்படும். அடையாறு ஆற்றின் இருபுறமும் பூங்காக்கள் அமைக்கப்படும்.

கோவையில் செம்மொழிப்பூங்கா 2 கட்டங்களாக அமைக்கப்படும்.

மரக்காணத்தில் 25 கோடி ரூபாய் நிதியில் சர்வதேச பறவைகள் மையம் நிறுவப்படும்.

5,145 கி.மீ கிராமப்புற சாலைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும்.

தங்கம் மற்றும் கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தள்ளுபடி செய்ய ரூ.3,993 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் புதியதாக அமைக்கப்படவுள்ளது. இது மாநிலத்தின் 18வது சரணாலயமாக இருக்கும்.

கடல் அரிப்பு மற்றும் கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சித்திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படவுள்ளது.

பொதுவிநியோகத்திட்டத்தில் உணவு மாணியத்திற்காக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க ரூ.320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.24,712 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் காலை உணவு திட்டத்தை தொடங்கும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக மாத ஓய்வூதியம் ரூ.1500 ஆகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவித் தொகை ரூ.2000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

சென்னையில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு 4 புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்படும் என்றும் இதன் பராமரிப்பு பணிகள் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களிடம் அமைக்கப்படும் என்றும் கூறப்படுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ.200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படவுள்ளது.

54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்.

சென்னையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும், இந்த பள்ளிகளில் பணியாற்றும் அனைவரின் பணிப்பலன்கள் பாதுகாக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ.18,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் கட்டப்படும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்தாண்டு திறக்கப்படும்.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ளது.

தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்.

இலங்கை மறுவாழ்வு முகாம்களில் மீதமுள்ள 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் படைவீரர்கள் நலன்:

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ.20 லட்சம் நிதியுதவி ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

TAMILNADU BUDGET 2023 - 2024

தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்புகள்

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: வயது முதிர்ந்த மேலும் 590 தமிழறிஞர்களுக்கு இலவச பேருந்து பயணம்.

தமிழ் கணினி பண்பாட்டு மாநாடு நடத்தப்படும்.

தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

இந்தி திணிப்பு எதிர்ப்புக்காக உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து இருவருக்கும் சென்னையில் நினைவிடம்.

அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.

அண்ணல் அம்பேத்கரின் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்த்திட ₹5 கோடி நிதி ஒதுக்கீடு.

அதிமுக வெளிநடப்பு

TAMILNADU BUDGET 2023 – 2024: தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) 2023 – 2024: தமிழக சட்டப்பேரவையில் 2023-24க்கான பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது ஜனநாயக படுகொலை நடந்ததாக கூறி தமிழக சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.