THALAPATHY VIJAY 67 – LEO: யாரும் எதிர்பார்க்காத தளபதி 67 டைட்டில் இதுதான்

0
482
THALAPATHY VIJAY 67 LEO

THALAPATHY VIJAY 67 LEO

THALAPATHY VIJAY 67 – LEO: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் சினிமா தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படம் குறித்த பல அப்டேட்டுகள் கடந்த சில தினங்களாகவே வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் படத்தின் பூஜை, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பல செய்திகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்லும் படகுழு விமானத்தில் இருக்கும் படியான வீடியோவை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

அதில் விஜய், த்ரிஷா உட்பட பலரும் இருக்கின்றனர். இதை அடுத்து இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் பற்றிய ப்ரோமோ வீடியோ வெளிவர இருக்கிறது. நேற்று இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்த பட குழு ஒரு போஸ்டரையும் வெளியிட்டு இருந்தது.

அதில் விஜய்யின் புகைப்படம் முழுவதும் ரத்தம் தெறிக்கும் அளவுக்கு இருந்தது. இதுவே பட தலைப்பு பற்றிய ஒரு மறைமுக குறிப்பாகவும் நமக்கு தோன்றியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்குLEO – Bloody Sweet என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகிறது படம்.

கோல்ட் காயினில் லியோ டைட்டில், சாக்லேட் ஃபேக்டரி, பட்டறையில் கூர்வாள் உருவாக்குவது என லியோ படத்தின் இன்ட்ரோ ப்ரோமோ வீடியோவே புதுசாகவும் ரசிக்கும்படியும் சாக்லேட்டை விஜய் ருசிப்பது போல ருசிக்கும் படியும் உருவாகி உள்ளது.

பிளடி ஸ்வீட் என விஜய் ப்ரோமோ வீடியோவில் பேசியதை பார்த்த ரசிகர்கள் அடுத்த கணமே #BloodySweet ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

YOUTUBE PROMO VIDEO LINK – VIJAY 67 – LEO PROMO