TN GOVT ARTS COLLEGE RANKING LIST 2023: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்லூரி வாரியாக தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியல் இன்று (25.05.2023) கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், ஆங்கில மொழி பட்டப்படிப்புகள் மற்றும் பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் தனி தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட கலந்தாய்வும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22-ந்தேதி வகுப்புகள் தொடங்கும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.