TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023: பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்ப பதிவு 20வது மே முதல் தொடங்குவதாக அறிவிப்பு

0
517
TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023
TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023

TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023: பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இவர்களில் மாணவர்கள் 4,55,017, மாணவிகள் 4,59,303 தேர்வு எழுதினர். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், வரும் கல்வியாண்டிற்கான பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கப்படுகிறது.

TN GOVT COLLEGE UG APPLICATION 2023: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர்வதற்கான கல்வித் தகுதி

TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023: முதலாமாண்டு பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அல்லது) அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு /12ஆம் வகுப்பு / ITI மதிப்பென் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், சிறப்பு பிரிவினர் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பதார் புகைப்படம் ஆகியவை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை 2023

TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023: பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் தொலைபேசி எண்களை மாணவர்கள் https.//www.tnpoly.in இணையதள வாயிலாக அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023
TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023

REGISTRATION FOR TAMILNADU GOVERNMENT POLYTECHNIC COLLEGE 2023

TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023
TN POLYTECHNIC GOVERNMENT COLLEGE ADMISSION 2023

LOGIN FOR TAMILNADU GOVERNMENT POLYTECHNIC COLLEGE 2023