Union Budget 2023 – 2024 / 2023-24ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தொழில் செய்வோர் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகள்: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் Union Budget 2023 – 2024 தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
2023-24 மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரதமர் மோடியின் தற்போதைய அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவே.
இதனால், பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
பொதுவாக சம்பளதாரர், தொழில்துறையினர், விவசாயிகள், ரயில்வே துறை ஆகிய துறைகளில் பட்ஜெட் சார்ந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் சம்பளம் பெறும் ஊழியர்கள் வரி விலக்குகள் மற்றும் ஸ்லாப் விகிதங்களின் அதிகரிப்பு குறித்து சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கம்.
தற்போது, வரி செலுத்துவோர் வரிகளை தாக்கல் செய்யும் போது இரண்டு வரி முறைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம், இதன் மூலம் அவர்களின் வருமானம் ரூ. 2.5 லட்சம் வரை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு எந்த வரியும் பொருந்தாது. வரப்போகும் பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கில் தொகை உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு சம்பளதாரர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
அதேபோல், கடந்தாண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரொப்போ வட்டி விகிதத்தை பல முறை உயர்த்தியது. இதன் காரணமாக தனிநபர் கடன் வங்கிக் கடன் தொடங்கி அனைத்து வகையிலான வங்கிக் கடன் வட்டியும் கணிசமாக அதிகரித்து.
மற்றக் கடன்களை விடவும் வீட்டுக்கடன் நீண்ட காலக் கடன் என்பதால் ரெப்போ வட்டி உயர்வு அதிக பாதிப்பை தந்துள்ளது. எனவே,வீட்டுக்கடன் தொடர்பாக சலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் இடையே உள்ளது.
வங்கியில் கடன் பெற்று அதில் வீடு வங்கி அதிலேயே குடியிருக்கும் வீட்டுக்கடன்காரர்களுக்கு எதிர்வரும் பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், வேளாண் துறையிலும் முக்கிய அறிவிப்புகளை விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர். தற்போது PM-KISAN நிதியுதவித் திட்டத்தை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இது ரூ.2,000 என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி தொகையை ரூ.2000 அதிகரித்து ஆண்டுக்கு ரூ.8000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், ரயில்வே துறையை நவீனமயமாக்க பல திட்டங்களை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் அதி நவீன அதிகவேக சிறப்பு ரயில் திட்டமாக வந்தே பாரத் திட்டம் உள்ளது.
இந்த திட்டத்தை முழு வீச்சில் கொண்டு செல்லும் விதமாக 400 முதல் 500 வரை புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பூஜ்ய கார்பன் உமிழ்வு என்ற இலக்கை நோக்கி ரயில்வே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2030 ஆண்டுக்குள் நாட்டின் ரயில்பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் திட்டத்தை அரசு கொண்டுள்ளதால் இது தொடர்பான திட்ட அறிவிப்புகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
எனவே, வரும் பட்ஜெட்டில் ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்கள், சேவை மேம்பாட்டு திட்டங்களுக்காக ரயில்வேத் துறைக்கு ரூ.1.9 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனத் துறை
Union Budget 2023: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வாகனத் துறைக்கு உள்ளது. ஏராளமான உட்பிரிவு தொழில்கள் இந்த துறையைச் சார்ந்தே உள்ளன. காலநிலை மாறுபாடு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. அதற்கான நிதி மற்றும் மானிய அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் வாகனத் தயாரிப்பாளர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.
ஜவுளித் துறை
Union Budget 2023 – 2024: நாட்டின் ஜவுளி ஏற்றுமதி 22 சதவீதம் குறைந்துள்ளதற்கு பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 11 சதவீத வரிதான் காரணம் என்பது ஜவுளி துறையினரின் கருத்தாக உள்ளது. எனவே, பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டதைப் போல , இனி ஆண்டுதோறும் அதுபோன்ற சலுகையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜவுளித் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், ஜவுளித் துறை இயந்திரங்கள் இறக்குமதிக்கு தற்போதுள்ள 5 சதவீத வரியை 7.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும் என ஜவுளி துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
சுகாதாரம்
Union Budget 2023 – 2024: கரோனா காலகட்டத்தில் மருந்து துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இருப்பினும், அந்த துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை இன்னும் அதிகமாக மேற்கொள்ள வேண்டியிருப்பதால் அதிக நிதி ஒதுக்கீட்டை பட்ஜெட்டில் மருந்து நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன. இதன் மூலம், உலக அளவில் போட்டிகளை எதிர்கொண்டு ஏற்றுமதியை அதிகரிக்க முடியும் என்பது மருந்து துறை நிறுவனங்களின் நம்பிக்கை.
ரியல் எஸ்டேட்
Union Budget 2023 – 2024: 2019-ல் உருவான கரோனா அலையால் இரண்டு ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் கடுமையான சுணக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த ஓராண்டாக குடியிருப்புகளுக்கன தேவை அதிகரித்துள்ளது. எனவே, வீட்டு கடனில் சலுகை அறிவிப்புகளை இந்த துறை எதிர்நோக்கியுள்ளது.
விமானப் போக்குவரத்து
Union Budget 2023 – 2024: கரோனா பேரிடர் காரணமாக இரண்டு ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த விமானப் போக்குவரத்து தற்போதுதான் உயிர்பெற ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், விமான எரிபொருள் விலை உயர்வு, விமான நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள விமானப் போக்குவரத்து துறை பட்ஜெட்டில் நிதி சலுகை அறிவிப்புகளை எதிர்பார்த்துள்ளது.
சுற்றுலா
மந்த நிலையில் இருந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை கடந்த ஆண்டு பிற்பகுதியில் மீளத் தொடங்கியது. பட்ஜெட்டில் சுற்றுலா துறை தொடர்பான ஜிஎஸ்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என்பதே அத்துறையினரின் விருப்பமாக உள்ளது.
வங்கி
நாட்டின் பொருளாதார கட்டமைப்புக்கு வங்கிகளின் சேவை மிக ஆதாரமானதாக உள்ளது. அந்த வகையில் வங்கி கட்டமைப்பு மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் மூலதன ஒதுக்கீடு பங்கு விற்பனை உள்ளிட்டவற்றில் தெளிவான அறிவிப்புகளை வங்கிகள் எதிர்நோக்கியுள்ளன.
தகவல் தொழில்நுட்பம்
Union Budget 2023 – 2024: உலகின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மையமாக இந்தியா மாறி வருகிறது. இந்த நிலையில் இந்த தொழில்நுட்பத்தை கிராமங்களின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் வகையில் விதிமுறைகளை எளிதாக்க வேண்டும். வரிச் சுமைகளை குறைப்பதன் வாயிலாக டிஜிட்டல் துறையில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட முடியும்.
அறிவுசார் சொத்துரிமை சட்டங்களில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பதே இந்த துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பு.
தொலைத்தொடர்பு
Union Budget 2023 – 2024: பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கிராமப்புற பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் உள்கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.
அதற்கான திட்டம் மற்றும் நிதி உதவிகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டும் என்பது தொலைத் தொடர்பு துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும், இந்த துறையில் முதலீடுகளை ஊக்குவித்திட வரி சலுகைகளும் எதிர்பார்க்கப்படுகிறது. உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம், அதற்கான ஒதுக்கீடு ஆகியவற்றில் ஜிஎஸ்டி விலக்களிப்பதன் மூலம் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களின் செயல்பாட்டை மேலும் ஊக்குவிக்க முடியும் என இத்துறைனர் தெரிவித்துள்ளனர்.
வேளாண்மை
Union Budget 2023 – 2024: நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் வேளாண் தொழிலை ஊக்குவிக்க பயிர் பாதுகாப்பு ரசாயனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்பது இந்த துறையினரின் பட்ஜெட் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், ஆராய்ச்சிகளை பரந்த அளவில் மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என இந்திய வேளாண் ரசாயன கூட்டமைப்பு (ஏசிஎப்ஐ) அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
வருமான வரி சலுகை
Union Budget 2023 – 2024: வருமான வரி விலக்கு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை பல வருடங்களாக வைக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பாக பட்ஜெட்டில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மிடில் கிளாஸ் மக்களின் சுமையை குறைக்கும் விதமாக பட்ஜெட்டில் இது தொடர்பான சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் நிர்மலா சீதாராமன் தன்னை மிடில் கிளாஸ் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மிடில் கிளாஸ் மக்களுக்கான சலுகைகளை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரயில்வேத்துறை
Union Budget 2023 – 2024: ரயில்வே – மத்திய பட்ஜெட்டுடன் இன்று ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்படும். ரயில்வே டிக்கெட் விலை குறைப்பு. புதிய ரயில் அறிவிப்புகள். வந்தே பாரத் வழிதட அதிகரிப்பு.
அதிவேக ரயில் தொடர்பான அறிவிப்புகள் போன்ற அறிவிப்புகள் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் தென்னிந்திய நாடுகளுக்கு குறைவான ரயில்வே திட்டங்களே அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் தென்னிந்தியா மீது கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி துறை
Union Budget 2023 – 2024: பொருளாதார ஆய்வறிக்கையில் உற்பத்தி மற்றும் கட்டுமான துறையில் இந்தியாவில் 141.4 லட்சம் கோடி செலவில் 89,151 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 5.5 லட்சம் கோடி மதிப்பிலான 1009 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இன்று பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாலிசிகள், சலுகைகள், திட்டங்கள் இன்று கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.