அஜித் 62வது படத்தில் விக்னேஷ் சிவன் நீக்கம்? / VIGNESH SIVAN REMOVED FROM AJITH AK62

0
433

VIGNSH SHIVAN REMOVED AJITH'S AK62

அஜித் 62வது படத்தில் விக்னேஷ் சிவன் நீக்கம்? / VIGNESH SIVAN REMOVED FROM AJITH AK62: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருக்குறள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

  • ‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் குமார் நடிக்கும் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
  • இந்நிலையில், அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதி லாக அஜித்தின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி அல்லது விஷ்ணுவர்தன் இயக்குவார் என்றும் நேற்று முதல் சமூக வலைத்தங்களில் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • இத்தகவலை தொடர்ந்து டிவிட்டரில் ‘ஜஸ்டிஸ் விக்னேஷ் சிவன்’ என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இதுகுறித்து அஜித் தரப்பில் விசாரித்தபோது, ‘அஜித்துக்காக விக்னேஷ் சிவன் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் கதை சொல்லியிருக்கிறார்.
  • அந்தக் கதைக்கு லைகா புரொடக்‌ஷன்சும், அஜித்தும் ஒப்புதல் அளித்துவிட்டனர். ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகம் என்பதால், கதையை இன்னும் முழுமையாக டெவலப் செய்து நடிக்க அஜித் விரும்புகிறார்.
  • எனவே, இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் அஜித் இன்னொரு படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அஜித், விக்னேஷ் சிவன் இணையும் படம் கைவிடப்படவில்லை’ என்று கூறப்பட்டது.
  • இதனால் ஏகே 62 படத்தினை விக்னேஷ் சிவன் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி, வரும் தீபாவளிக்கு படம் வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் படம் நிறுத்தப்பட்டது. தற்பொழுது வேறு இயக்குனரை தேடி வருகிறார். அதனால் அஜித் படம் தீபாவளி அல்லாமல் பொங்கலுக்கு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • அஜித் படம் பொங்கலுக்கு போனதால் அக்டோபர் வெளியாகும் ஜெயிலர் திரைப்படத்தை போட்டியின்றி வெளியிட சன் பிக்சர்ஸ் தீபாவளியன்று வெளியிடுகிறது.
  • சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படம் தீபாவளிக்கு வருவதால் விஜய் நடிக்கும் படத்தை அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி முன்னரே வெளியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • விக்னேஷ் சிவன் என்ற ஒரு இயக்குனர் மாற்றத்தினால் பல படங்களின் வெளியீடு தேதியை மாறி இருக்கிறது. ஏகே 62 & ஏகே 63 போன்ற இரண்டு படங்களை கைப்பற்றும் போட்டியில் இயக்குனர் மகிழ் திருமேனி, விஷ்ணு வரதன், அட்லி, ஏஆர் முருகதாஸ் போன்ற நான்கு இயக்குனர்கள் உள்ளனர். அதிலும் இந்த நான்கு இயக்குனர்களும் இரண்டு பேர் உறுதியாகியுள்ளனர்.
  • சமீபத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான கழகத் தலைவன் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62-வது படத்தை இயக்க உள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.
  • இவரைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளன. விஜய்க்கு தொடர் வெற்றிகளை கொடுத்த அட்லி, தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
  • இந்த படத்திற்கு பிறகு அஜித்தின் ஏகே 63 படத்தை அட்லி இயக்க, லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இவ்வாறு அஜித் படத்தின் இயக்குனர்களை தேர்வு செய்வதில் திடீர் மாற்றம் ஏற்பட்டதால் ரஜினி மற்றும் விஜய் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.