கொத்தமல்லி / CORIANDRUM SATIVUM (KOTHAMALLI): எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் கொத்தமல்லி தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
- கொத்தமல்லி (Coriandrum sativum / Kothamalli) அல்லது மல்லி எனப்படுவது ஒரு மூலிகையும், கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருளும் ஆகும். இது Apiaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.
- சிறு செடி வகையைச் சார்ந்தது. இச்செடி 50 செமீ உயரம் வளரக் கூடியது. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது.
- இசுரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன.
- உணவு கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
- சாம்பார், இரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.
- கொத்தமல்லி (Coriandrum sativum / Kothamalli) விதையை தனியா என்றும் அழைக்கின்றனர். கொத்தமல்லி இலையை பச்சடியாக, பொடியாக அல்லது கீரையாக ஆக்குவர்.
பயிரிடல்
- கொத்தமல்லி (Coriandrum sativum / Kothamalli) தட்பவெப்ப நிலை பொருந்திய இடத்தில் எளிதாக வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு சுமாராக 12-15 கிலோ விதை தேவைப்படும்.
- நிலத்தினை உழுது , தொழு உரம் இறைத்து, பாத்தி கட்டிய நீர் பாய்ச்சப்பட்ட நிலத்தின், ஈர மண்ணில் கொத்துமல்லி (Coriandrum sativum / Kothamalli) விதைகளை தூவி, நிலத்தினை கீறி விட வேண்டும்.
- நான்கு நாட்களுக்கு ஒரு முறை என 40 நாட்களில் 10 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 35ம் நாட்களில் ஒரு கை களை எடுக்க வேண்டும்.
- வாழையில் ஊடுபயிராக கொத்துமல்லியை சொட்டுநீர்ப் பாசன முறையில் சாகுபடி செய்கிறார்கள்