KAMBAR IN TAMIL / கம்பர் பற்றிய குறிப்புகள்

0
1393

KAMBAR IN TAMIL

கம்பர் பற்றிய குறிப்புகள் / KAMBAR IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் கம்பர் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது

கம்பர் சோழ நாட்டு தேரழுந்தூரில் பிறந்தார். இவ்வூர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. கம்பரின் தந்தையார் ஆதித்தன். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தார். இவரைத் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் ஆதரித்தார்.

கம்பரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு. இவர் செய்நன்றி மறவாத இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ள சடையப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல்வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்.

“சடகோபரந்தாரி, ஏரெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்” ஆகியன கம்பர் இயற்றிய பிறநூல்கள். ஏர் எழுபது, திருக்கை வழக்கம் இரண்டும் உழவு பற்றியது. ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தார், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவர்கள். கம்பர் இறந்த ஊர் பாண்டிய நாட்டு நாட்டரசன் கோட்டை.

  • “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
  • தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன்
  • மகன் = அம்பிகாபதி
  • மகள் = காவிரி
  • விருத்தம் பாடுவதில் வல்லவர்
  • *கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் காடு போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்:
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்;
  • கம்பரது காலம் 12ஆம் நூற்றாண்டு எழுதப்பட்ட காலம்தொட்டு மக்கள் இலக்கியமாகப் போற்றப்படுவதற்குக் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிநலமே காரணம்

ஆசிரியரின் சிறப்பு பெயர்கள்

  • கவிப்பேரரசர்
  • கவிக்கோமான்
  • கம்பநாடுடைய வள்ளல்
  • கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்)
  • சந்த வேந்தர்
  • தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன்

கம்பர் இயற்றிய நூல்கள்

  • கம்பராமாயணம்
  • ஏர் எழுபது
  • சிலை எழுபது
  • சரஸ்வதி அந்தாதி
  • திருக்கை வழக்கம் (இரண்டாம் உழவு பற்றியது)
  • கம்பர் மகன் அம்பிகாபதி
  • சடகோபர் அந்தாதி (நம்மாழ்வார் பற்றியது)
  • கம்பராமாயணம்
  • அம்பிகாபதி எழுதியது அம்பிகாபதிக்கோவை
  • இராம நாடகக் கீர்த்தனை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்.

புகழுரைகள்

  • “கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
  • “கம்பனைப் போல வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”- பாரதியார்