KOTHAMALLI: கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள் / MEDICAL BENEFITS OF KOTHAMALLI (CORIANDRUM SAVITUM)

0
578
CORIANDRUM SATIVUM KOTHAMALLI

CORIANDRUM SATIVUM KOTHAMALLI

KOTHAMALLI – கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள் / MEDICAL BENEFITS OF KOTHAMALLI (CORIANDRUM SAVITUM): எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் கொத்தமல்லி தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

  • நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் முக்கிய பொருளாகவும், உணவை அலங்கரிக்கவும் கொத்தமல்லி இலைகள் பயன்படுகின்றன. இந்த கொத்தமல்லி இலைகள் பல்வேறு உணவு வகைகளில், பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி, உடல் நலத்திற்குப் பலவகையான நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கியமான மூலிகையுமாகும்.
  • கொத்தமல்லி இலைகளில் தயமின், நியாசின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் சி, பாஸ்பரஸ், கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
  • மேலும், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துக்கள் போன்றவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது.
  • கொத்தமல்லி இலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கொத்தமலை இலைகளை அரைத்து முகத்தில் பூசுவதால் தோல் சுருக்கம் மற்றும் கருமை மறையும். மிக எளிதாகவும், விலை மளிவாகவும் கிடைக்கக்கூடிய ஒன்று கொத்தமல்லியாகும்.
  • கொத்தமல்லி அரைத்து கண்களுக்கு மேலெ பற்று போடுவதால், கண் பிரச்சனைகள் குறைகிறது. கண்களுக்கு பலம் கிடைக்கிறது. கண்கள் பிரகாசம் ஆகிறது. கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்ரறும் கண்களில் உள்ள கருவளையங்கள் ஆகியவை முகத்திற்கு முதிச்சியான தோற்றத்தை தரக்கூடியது
  • வயிற்று வலி, அஜீரண கோளாறுகல் போன்றவற்றை போக்குகிறது, இது ஈரலை பலப்படுத்துகிறது. கொத்தமல்லி ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இது அம்மை நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது. இந்த மருத்துவம் வெளிநாடுகளில் கூட மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
  • கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது.
  • கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும். சிறுநீர் தேங்கினால் கை, கால்களில் வீக்கம் உண்டாகும்.
  • தனியா தேநீரை பருகுவதினால், வாயு பிரச்சனைகள் அகலும், அடிக்கடி ஏப்பம் உண்டாவது, ஏப்பத்தினால், நெஞ்செரிச்சல் உண்டாவது போன்றவை குணமாகும்.
  • கொத்தமல்லிக்கு ஆற்றும் குணம் அதிகம் உண்டு. இது நாளமில்லா சுரப்பிகளை நன்கு இயங்கச் செய்யும். மாதவிலக்கு ஒழுங்கின்மை, வலி ஆகிய பிரச்சினைகளை உடையவர்கள் தினம் கொத்தமல்லி இலை ஜூஸ் அருந்துவது நல்லது.