பல்லி விழும் பலன்கள் மற்றும் அதன் பரிகாரங்கள் (Palli Vilum Palan in Tamil): எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் பல்லி விழும் பலன் தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
To know more About Tamil History At One Place – One Tamil
பல்லி விழும் பலன்
பல்லி விழும் பலன் (Palli Vilum Palan in Tamil): பல்லி என்பது வீடுகளில் சுவர்களில் வாழும் ஒரு வகை உயிரினம் ஆகும். பல்லி கடவுளின் தூதன் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. பண்டைய காலங்களில் பல்லியை வைத்து படித்து வந்த படிப்பு கௌரி சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக பல்லி என்பது கடவுள்களில் கேது பகவானொடு ஒப்பிடப்படுகிறது. பள்ளி சாஸ்திரத்தில் பல்லி கத்துதல் மற்றும் பல்லி நம் உடல் மேல் விழுந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
நம் நாட்டில் விலங்குகளை கொண்டு பல சாஸ்திரம் சம்பிரதாயங்கள் கடை பிடிக்கப்படுகின்றன அதிலும் பசு மாடு, காகம், நாய், பல்லி, கழுதை முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதிலும் நாம் வீட்டை விட்டு செல்லும்போதும் ஒரு சுபகாரியத்துக்கான வேலை தொடங்க செல்லும்போதும் பசுமாடு எதிரில் வந்தால் நல்லது, அதுபோல காக்கை நம் வீட்டின் மேல் அமர்ந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்று கூறுவர்.
காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பது போல எண்ணி முக்கிய திதி நாட்களிலும் சனி கிழமைகளிலும் உணவு வைப்பது பிரதானம். இந்த பதிவில் பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுந்தால் என்ன பலன் என்று சாஸ்திர விதிகள் கூறியுள்ளதை பார்ப்போம்.
தலையில் பல்லி விழுந்தால்
நெற்றியில் பல்லி விழுந்தால்
தலை முடியில் பல்லி விழுந்தால்
முகத்தில் பல்லி விழுந்தால்
புருவம்
கண்களில் பல்லி விழுந்தால்
இடதுகண்
வலது கண்
இடது கை மற்றும் இடது கால்களில் பல்லி விழுந்தால்
வலது கை மற்றும் கால்களில் பல்லி விழுந்தால்
தொப்புள் பல்லி விழுந்தால்
தொடையில் பல்லி விழுந்தால்
மார்பில் பல்லி விழுந்தால்
கழுத்தில் பல்லி விழுந்தால்
இடது பக்கத்தில் பல்லி விழுதல் எந்த காரியத்திலும் வெற்றியைக் கிடைக்கும் என்பதை குறிக்கிறது. பொதுவாக பள்ளியானது வலது பக்கத்தில் விழுந்தால் ஒருவருக்கொருவர் பகையாக இருப்பார் என்பதை குறிக்கிறது.
உதடு
மேல் உதடு
கீழ் உதடு
பாதத்தில் பல்லி விழுந்தால்
வலது பாதம்
வலது பாதத்தில் பல்லி விழுந்தால் கஷ்டத்தை குறிக்கும்.
இடது பாதம்
பொதுவாக பல்லியானது இடது பாதத்தின் விழுந்தால் அவர்களுக்கு கெட்டது நடக்கும் என்பதை குறிக்கிறது
மணிக்கட்டு
வலது மணிக்கட்டு
ஆண் பெண் இருபாலருக்கும் வலது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் நல்லதே நடக்கும் என்று குறிக்கிறது
இடது மணிக்கட்டு
இடது மணிக்கட்டில் பல்லி விழுந்தால் பொதுவாக எல்லோருக்கும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
தோள்பட்டை
வலது தோல்பட்டை
வலது தோள்பட்டையில் பல்லி விழுந்தால் எதிரிலும் வெற்றியை கிடைக்கும்
இடது தோல்பட்டை
இடது தோள்பட்டையில் பல்லி விழுந்தால் பேரின்ப செய்தி வந்து சேரும் என்பதை குறிக்கிறது.
கைவிரல்
பள்ளியானது வலதுகையின் விரலில் விழுந்தால் பரிசு பெறலாம் அல்லது இடது கை விரலில் விழுந்தால் கவலைகள் நம்மை வந்து சேரும் என குறிக்கிறது.
பல்லி விழும் பலன் (Palli Vilum Palan in Tamil): பல்லி என்பது நவகிரகங்களில் கேதுவை குறிப்பிடுகிறது. நம் முன்னோர்கள் பல்லி எந்த திசையில் கத்துகிறது என்பதை வைத்தும், பல்லி மனிதர்கள் மேல் விழும் போது எந்த பாகத்தில் விழுகிறது என்பதை வைத்தும் ஏற்படும் பலன்கள் மற்றும் எதிர்மறை பலன்களை குறிப்பிட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறு எதிர்மறை பலன்களை கொடுக்கும் பாகங்களின் மீது விழுந்தால் அதற்கான பரிகாரத்தையும் நூல்களில் குறிப்பிட்டு சென்றுள்ளனர்.
பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்களை போக்குவதற்கான பரிகாரங்கள்
பல்லி விழும் பலன் (Palli Vilum Palan in Tamil): பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்களை போக்குவதற்கான பரிகாரங்களை தெரிந்து கொள்ளலாம். பல்லி விழுந்தால் அதை குறித்து வீணான பயங்ளையும், கவலைகளையும் உண்டாக்கிக்கொள்ளாமல் முதலில் உங்களின் இஷ்ட தெய்வத்தை மனதில் தியானித்து வணங்கினாலே போதும்.
இதையும் மீறி பல்லி விழுந்ததால் தோஷம் ஏற்பட்டதாக கருதும் நபர்கள் பல்லி விழுந்த பிறகு நன்கு தலைக்கு ஊற்றி குளித்த பிறகு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும்.
“மகா ம்ரித்யுஞ்ஜய மந்திரம்” படித்து வருவதால் பல்லி விழுந்த தோஷம் நீங்கும். பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்களையும், பல்லியை கொன்றதால் ஏற்படும் தோஷங்களும் நீங்க காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கிருக்கும் “தங்க பல்லி” சந்நிதியில் இருக்கும் தங்க பல்லியின் உருவத்தை தொட்டு வணங்குவதால் பல்லி சம்பந்தமான அதனை தோஷங்களும் நீங்கும்.
நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் முதலில் உடனே சென்று குளித்து விடுங்கள். குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள்.
கோயில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி இறைவனை வழிபடுங்கள். தலையில் விந்தவர்கள் மட்டும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் ஒரு நாள் முழுதும் வீட்டிலோ அல்லது கோயிலிலோ இருக்க வேண்டும். யாரிடமும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.