திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் / THIRUVALLUVAR HISTORY IN TAMIL

1
5618

THIRUVALLUVAR IN TAMIL

திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள் / THIRUVALLUVAR HISTORY IN TAMIL: எங்களதுதமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருவள்ளுவர் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க காலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்க காலப் புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது.

மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது.

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

திருவள்ளுவர் (THIRUVALLUVAR)

  • திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்
  • இவரது காலம் கி.மு 31 என்று கூறுவர் இதை தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது
  • இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை
  • இவர் சமண மதத்தைச் சார்ந்தவர் என்பது உறுதி
  • தொடக்கமாகக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  • இவரது ஊர் பெற்றோர் குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.
  • கிறிஸ்து ஆண்டு கி.பி 31 – திருவள்ளுவர் ஆண்டு.
  • எ.கா: 2013 = 31 – 2044 = கி.பி 2013ஐ திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்

திருவள்ளுவர் கூறிய உடைமைகள்

  • அன்புடைமை
  • அடக்கமுடைமை
  • ஒழுக்கமுடைமை
  • பொறையுடைமை
  • அருளுடைமை
  • அறிவுடைமை
  • ஊக்கமுடைமை
  • ஆள்வினையுடைமை
  • பண்புடைமை
  • நாணுடைமை

திருவள்ளுவரின் காலம்

  • கி.மு 1 = வி.ஆர்.ஆர் தீட்சிதர்
  • கி.மு 31 = மறைமலை அடிகள் (இதனை நாம் பின்பற்றுகிறோம்)
  • கி.மு 1 – 3 = இராசமாணிக்கனார்

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

  • நாயனார்
  • தேவர் (நச்சினார்கினியர்)
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர் (இளம்பூரணார்)
  • நான்முகனார்
  • மாதானுபங்கி (தாய்க்கு நிகரானவர்)
  • செந்நாப்போதார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர் (மணிமேகலை)
  • பொய்யாமொழிப் புலவர்
  • வான்புகழ் வள்ளுவர்

நினைவுச் சின்னங்கள்

இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை (THIRUVALLUVAR STATUE) ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது. 1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது.

புகழுரைகள்‌

  • தமிழ்‌ மாதின்‌ இனிய உயர்நிலை என்று கூறியவர்‌ – கவிமணி
  • ரஷ்ய அறிஞர்‌ டால்ஸ்டாய்‌ வழிகாட்டுதலின்‌ பெயரில்‌ திருக்குறள்‌ மூலத்தை படிக்க விரும்பியே தமிழ்‌ படிக்க தொடங்கினேன்‌ – காந்தி
  • வள்ளுவனைப்‌ பெற்றதனால்‌ பெற்றதே புகழ்‌ வையகமே – பாரதிதாசன்‌
  • இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே – பாரதிதாசன்‌
  • வள்ளுவன்‌ தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ்‌ கொண்ட தமிழ்நாடு – பாரதியார்‌
  • யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்‌ போல்‌ வள்ளுவனைப்போல்‌ யாருமில்லை – பாரதியார்‌
  • ஆலும்‌ வேலும்‌ பல்லுக்குறுதி நாலும்‌ இரண்டும்‌ சொல்லுக்குறுதி – பழமொழி
  • கடுகைத்‌ துளைத்தேழ்‌ஏழு கடலைப்‌ புகட்டி குறுகத்‌ தித்த குறள்‌ – இடைக்காடனார்‌
  • அணுவவைச்‌ துளைத்தேழ்‌ ஏழுகடலைப்‌ புகட்டி குறுகத்‌ திந்த குறள் – ஒளவையார்‌
  • எல்லா பொருளும்‌ இதன்பால்‌ உள – மதுரை தமிழ்நாகனார்‌
  • திருவள்ளுவர்‌ என்ற ஒருவன்‌ தோன்றியிராவிட்டால்‌ தமிழன்‌ என்ற ஓர்‌ இனம்‌ உள்ளதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது, திருக்குறள் என்று நூல் தோன்றியிராவிட்டால் தமிழ் மொழி உலகிற்கு தெரியாது – கி.ஆ.பெ.விஸ்வநாதம்‌
  • திருக்குறள்‌ ஒரு வகுப்பார்க்கோ ஒரு மதத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒருநாட்டார்க்கோ உரியுதன்று அது மன்பதைக்கு உலகுபொது – திரு.வி.க
  • செந்தமிழ்‌ செல்வ திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய்‌ தினம்‌ – கவிமணி
  • திணையளவுப்‌ போதா சிறுபுல்‌ நீர்‌ நீண்ட பனையளவு காட்டும்‌ படித்தால், மனையளகு வள்ளைக்கு  உறங்கும் வளநாட வள்ளுவனார்  வெள்ளைக் குறட்பா விரி -‌கபிலர்‌
  • உள்ளுதோர்‌ உள்ளுதோர்‌ உலகம்‌ உறுத்துமே வள்ளுவர்‌ வாய்மொழி மாண்பு – மாங்குடி மருதனார்‌
  • மூன்று மன்னவர்க்கு சென்னியில்‌ அரியுதக்க மாலை திருக்குறள் – சீத்தலைச்சாத்தனார்‌
  • உலக இலக்கியங்களில்‌ திருக்குறளைப்போல சிறந்த அறம்‌ வளர்க்கும்‌ நூல் வேறு இல்லை – ஆல்பர்ட் ஸ்விட்சர்‌
  • திருக்குறளை முற்றிலும்‌ ஓதிய பின்‌ வேறு நால்‌ பயிற்சி வேண்டா, மண்ணுதமிழ்‌ புலவராய்‌ வீற்றிருக்கலாம்‌ – நல்லூர்‌ நத்தத்தனார்‌
  • உலகினில் நாகரிகம் முற்றிலும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் – கால்டுவெல்
  • திருவள்ளுவ பயன் எனக் கூறியவர் – நச்சினார்க்கினியார்
  • தமிழ் மாதின் இனிய உயிர் நிலை – கவிமணி
  • தேவர் என கூறியவர் – நச்சினார்க்கினியர்
  • தெய்வப்புலவர் என கூறியவர் – இளம்பூரணார்
  • பொருளுரை எனக் கூறியவர் – சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
  • பொய்யில் புலவர் எனக் கூறியவர் – சீத்தலைச் சாத்தனார் (மணிமேகலை)
  • வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்கள், உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொருநீதி – மனோன்மணியம் சுந்தரனார்
  • எம்மதம் எவ்வினமும் எந்நாளும் சம்மதம் என்று ஏற்கும்  தமிழ் வேதம் – சுத்தானந்தபாரதி
  • குன்றாத செந்தளிர் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன் மண்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல் – இறையனார்
  • வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து – பரணர்
  • பொய்ப்பால பொய்யேயாப்ப போயினபொய் யல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செய் திருக்குறளால் வையத்து வாழ்வார் மனத்து – தேனிக்குடி கீரனார்
  • ஒன்றே பொருளெனின் வேறென்பர்; வேறெனின் அன்றென்பர் ஆறு சமயத்தார்- நன்றென எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி – கல்லாடர்
  • என்றும் புலரா தியாணர்நாட் செல்லகினும் நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நிர்மைய தாய்க குன்றாத – இறையனார் (திருவள்ளுவமாலை
  • புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச் சித்தம்கலங்கித் திகைப்பதேன்”- வித்தகன் “தெய்வப் புலவர் திருவள்ளுவர்சொன்ன பொய்யில் மொழி இருக்கும் போது செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம் நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ஓதித்தொழுது எழுக ஓர்ந்து” வெல் – கவிமணி
  • இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
  • மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
  • மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்