UNION BUDGET 2023 – 2024 PRICE CHANGE LIST: மத்திய பட்ஜெட் 2023 – 2024 – விலை உயரும், விலை குறையும் பொருட்களின் முழு பட்டியல்

UNION BUDGET 2023 PRICE CHANGE

UNION BUDGET 2023 – 2024 PRICE CHANGE LIST: மத்திய பட்ஜெட் 2023 – 2024 – விலை உயரும், விலை குறையும் பொருட்களின் முழு பட்டியல்: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் UNION BUDGET 2023 – 2024 தொடர்பான முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

UNION BUDGET 2023 DOWNLOAD: பட்ஜெட் உரையை தமிழில் எவ்வாறு டவுண்லோட் செய்வது?

வருமான வரி விலக்குக்கான வரம்பு உயர்த்தப்பட்டது, உள்கட்டமைப்புக்கான முதலீடு அதிகரித்துள்ளது, பெண்களுக்கு தனி சேமிப்பு திட்டம் என பல அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல பொருட்களுக்கு வரியும் உயர்த்தப்பட்ம் குறைக்கப்பட்டும் இருக்கிறது. இந்த பட்ஜெட்டால் எந்த பொருட்களின் விலை உயரும் மற்றும் விலை குறையும் பொருட்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

UNION BUDGET 2023 – 2024: பட்ஜெட் 2023 – 24 – யார் யாருக்கு ? எத்தனை சதவீதம் வரி?

இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு அத்தியாவசியமற்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூவல்லரி, அதிநவீன எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்தும் விதமாக வரும் நிதியாண்டில் குடை, ஹெட்போன், பேஷன் ஜூவல்லரி போன்றவற்றுக்கு இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

கேமரா, டிவி, மொபைல் போன் உதிரிபாகங்களுக்கான அடிப்படை இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கேமரா உதிரிபாகங்கள், லென்ஸ்கள் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கான வரி விலக்கு 1 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

To know More About Highlights of Union Budget 2013 – 2014 / பட்ஜெட் 2023 – 2024

UNION BUDGET 2023 – 2024 PRICE CHANGE LIST: 2023 – 24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்தும் என்பதை நோக்கமாகக் கொண்டு இப்பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தொலைக்காட்சி, செல்போன் ஆகிய பொருட்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாகவும், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியை உயர்த்தப்படுவதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சில துறைகளுக்கான அடிப்படை இறக்குமதி வரி 23 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.

விலை அதிகரிப்பு பொருட்கள் / விலை உயரும் பொருட்கள்

  • தங்கம், வைரம், செம்பு உள்ளிட்டவற்றின் சுங்க வரி அதிகரிப்பு.
  • ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான சுங்க வரி அதிகரிப்பு.
  • பிளாட்டினத்தால் செய்யப்பட்ட பொருட்களுக்கும் சுங்க வரி அதிகரிப்பு.
  • சிகரெட் மீதான சுங்க வரி 16 சதவிகிதம் அதிகரிப்பு.
  • மின்சார சமையலறை புகைபோக்கிக்கான சுங்கவரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரிப்பு.
  • பொம்மை, மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் சுங்க வரியும் அதிகரிப்பு.

விலை குறையும் பொருட்கள்

  • மின்சார வாகன பேட்டரிகளுக்கான வரி குறைப்பு.
  • ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரி குறைப்பு.
  • மொபைல் போன், கேமரா, டிவி உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி 2.5 சதவீதமாக குறைப்பு.

Leave a Comment