VIJAY TV PANDIAN STORE SERIAL 2023: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் ஆண்டுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
அண்ணன் தம்பிகள் பாசம், கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் நன்மைகள், குழப்பங்கள் ஆகியவற்றை இந்த சீரியலின் கதை வெளிப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கிரெடிக் கார்டு வாங்கி செலவு செய்துவிட்டு பணம் கட்ட முடியாமல் திணறுகிறார்கள். இதனால், பேங்க் ஆபீஸர்ஸ் வீட்டிற்கு வந்து கண்ணனிடம் பிரச்சனை செய்து கண்ணனை அடிக்கிறார்கள்.
இந்த காட்சியைத் தான் ரசிகர்கள் லாஜிக் ரொம்ப உதைக்குது ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். இதில் அப்படி என்ன லாஜிக் உதைக்குது என்று கேட்கிறீர்களா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், ஜீவா வீட்டை விட்டு வெளியேறிய முடிவை ரசிகர்கள் பலரும் பாராட்டினார்கள். அதே போல, வங்கியில் வேலை செய்யும் கண்ணன், மனைவி ஐஸ்வர்யாவுடன் தனிக் குடித்தனம் சென்று வரவுக்கு மீறிய செலவு செய்து கடனில் சிக்கி திண்டாடுகிறார்கள்.
கண்ணன் – ஐஸ்வர்யா ஆடம்பர வாழ்க்கையால் வரவுகு மீறிய செலவு செய்து கடனாளியாகிறார்கள். ஐஸ்வர்யா தனக்கு கிடைத்த கண்ணனின் கிரெடிட் கார்டு மூலமாக கடன் வாங்கி வைத்துவிட்டு அந்த பில்லை கட்டாமல் நாட்களை கடத்தி வந்தார்.
இந்த நிலையில் பேங்க் ஆபீசர் தவனை மேல் தவனை கொடுத்து பார்த்து அதற்கு ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் பணத்தை கொடுக்காத போது, பேங்க் ஆபீஸர்ஸ் அவனுடைய வீட்டிற்கு வந்து, வீட்டில் இருக்கும் பொருட்களை தூக்கிக்கொண்டு செல்லவா? அல்லது ஐஸ்வர்யாவை தூக்கிக் கொண்டு போகவா என்று மிரட்டுகிறார்கள்.
அதனால், கண்ணன் அவர்களை கோபப்பட்டு அடிக்க அவர்கள் திருப்பி கண்ணனை அடித்து விட்டு சென்றிருக்கின்றார். தம்பிய் கண்ணனை அடித்துவிட்டார்கள் என்று கோபப்பட்டு கதிர் பேங்க் ஆஃபிஸர்களை அடிக்கிறார்.
இதனால், பேங்க் ஆஃபீஸர் கொடுத்த கம்ப்ளைன்டால் கதிர் போலீசில் கைது செய்யப்பட இருக்கிறார். இதனால் வளைகாப்பு இனி நடக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இங்கேதான், லாஜிக் மீறல் நடந்துள்ளது. அரசு வங்கியில் வேலை செய்யும் கண்ணனுக்கு கிரெடிக் கார்டு விதிகள் பற்றி தெரியாதா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றானர்.
இந்த கேள்வி நியாயமானதாகவே இருக்கிறது. டைரக்டர் சார் இந்த லாஜிக் மீறல் கொஞ்சம் என்னனு பாருங்க என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.