THIRUKKURAL IN TAMIL / திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள்

THIRUKKURAL IN TAMIL

திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: எங்களது தமிழ் அமுதம் (TAMIL AMUTHAM) இணையதளத்தில் திருக்குறள் பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் அதன் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.

திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Thirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும்.

சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.

TNPSC திருக்குறள் NOTES 6 TO 12 BOOK 2020 (TNPSC THIRUKURAL) – TAMIL ILAKIYAM

நூலின்‌ அமைப்பு

  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின்‌ உண்மையான வரலாறு நமக்குக்‌ கிடைத்திலது.
  • ஒவ்வொரு சமயத்தவரும்‌ திருவள்ளுவரைத்‌ தத்தம்‌ சமயத்தைச்‌ சேர்ந்தவரென்று புகழ்ந்து கூறுமளவிற்குத்‌, திருக்குறள்‌ இடமளிக்கின்றது.
  • இறைக்‌ கோட்பாட்டின்‌ பொதுவான நெறியைத்‌ திருக்குறள்‌ காட்டுகிறது.
  • திருக்குறள் – திரு + குறள் = சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல
  • இரண்டு அடிகளாலான குறள் வெண்பாக்களால் ஆனது.
  • திரு = சிறப்பு அடைமொழி
  • குறள் 80 குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்ந்துவதால் ➝ ஆகுபெயர்
  • திருக்குறள் = அடையெடுத்த கருவியாகுபெயர்
  • திருக்குறளின் முதல் பெயர் = முப்பால்
  • ஒன்பது இயல்களையும்‌ 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்டது
  • திருக்குறள்‌ ஏழு சீர்களால்‌ அமைந்த வெண்பாக்களைக்‌ கொண்டது.
  • ஏழு என்னும்‌ எண்ணுப்பெயர்‌ எட்டுக்‌ குறட்பாக்களில்‌ இடம்‌ பெற்றுள்ளது.
  • திருக்குறளில்‌ பத்து அதிகாரம்‌ பெயர்கள்‌ உடைமை என்னும்‌ சொல்லில்‌ அமைந்துள்ளது.
  • திருக்குறளில்‌ 2 முறை வரக்கூடிய அதிகாரத்‌ தலைப்பு – குறிப்பறிதல்‌
  • திருக்குறள் 3 முப்பால் பிரிவுகளையும் 9 இயல்களையும் 133 அதிகாரங்களையும் கொண்டது
  • திருக்குறள் முப்பால்களை கொண்டது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவை ஆகும்.
  • தனிமனிதனது வாழ்வை கூறுவது = அறத்துப்பால்
  • சமுதாய வாழ்வை கூறுவது = பொருட்பால்
  • அக வாழ்வை கூறுவது = இன்பத்துப்பால்
  • திருக்குறள் முன்னோடி = புறநானூறு
  • திருக்குறளின் விளக்கம் = நாலடியார் (சமண முனிவர்கள்)
  • திருக்குறளின் பெருமையை கூறுவது = திருவள்ளுவமாலை
  • திருக்குறளில் சாரம் எனப்படுவது = நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)
  • திருக்குறளின் ஒழிப்பு எனப்படுவது = திருவருட்பயன் (உமாபதி சிவம்)
  • நீதி நூல்களின்‌ நந்தா விளக்கம்‌ – திருக்குறள்‌
  • மனிதன்‌ மனிதனுக்கு அறிவுரை கூறிய நூல்‌ – திருக்குறள்‌
  • திருக்குறள் நடையியல் நூல் ஆசிரியர் = இ.சுந்தரமூர்த்தி
  • அரசு, வேளாண்மை, மருந்து, அன்பு, உயிர் மற்றும் மகிழ்ச்சி என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • உலக மொழியில் உள்ள அறநூல்களில் முதன்மையானது திருக்குறள். இது பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • உலக மொழிகளில் பல மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளின் அருமையையும் விளக்குகிறது.
  • மலையச்துவசன் மகன் ஞானப்பிரகாசம் 1812-இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு என்னும் எண்ணுப்பெயர் எட்டுக் குறட்பாக்களில் இடம் பெற்றுள்ளது.
  • இதன்‌ மொத்த அதிகாரங்கள்‌ 133 இதன்‌ கூட்டுத்தொகை ஏழு.
  • மொத்தம்‌ குறட்பாக்கள்‌ 1330 இதன்‌ கூட்டுத்‌ தொகையும்‌ ஏழு.
  • திருக்குறள் = அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது
  • தமிழுக்கு கதி என செல்வக் கேசவராய முதலியார் கூறும் நூல்கள் = கம்பராமாயணம், திருக்குறள்
  • உலகளாவிய இலக்கியம் என அழைக்கப்படுவது = திருக்குறள்
  • உடம்பை வளர்த்தேன் உபயம் அறிந்தே = திருவள்ளுவர்
  • அறிவு அற்றம் காக்கும் கருவி = திருவள்ளுவர்
  • தமிழரின் வாழ்வியல் இலக்கணம் = திருவள்ளுவர்

நூலின்‌ உரைகள்‌

  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: திருக்குறளின்‌ பழமையான உரை – பதின்மர்‌ உரை.
  • திருக்குறளுக்கு உரைசெய்த பதின்மர்‌ – தருமர்‌, தாமத்தர்‌, திருமலையர்‌, பரிதி, பரிபெருமாள்‌, பரிமேலழகர்‌, மல்லர்‌, மணக்குடவர்‌, நச்சர்‌, காளிங்கர்‌.
  • இப்பதின்மரில்‌ முதலாக உரை எழுதியவர்‌ மணக்குடவர்‌.
  • இப்பதின்மர்‌ உரையில்‌ சிறந்த உரையாக கருதப்படுவது பரிமேலழகர்‌ உரை ஆகும்‌.
  • பதின்மர்‌ எழுதிய உரையில்‌ நமக்கு கிடைத்தது 5 மட்டூமே.
  • பரிமேலழகர்‌ உரையுடன்‌ முதல்‌ முதலாக திருக்குறளை பதிப்பித்தவர்‌ – இராமானுஜ கவிராயர் (1840).
  • திருக்குறளை ஆங்கிலத்தில்‌ மொழிபெயர்த்த இந்தியர்‌ – கே.எச்‌. பால சுப்பிரமணியன்

கூற்றுகள்

  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: நூலும் இரண்டும் சொல்லுக்குறுதி = நாலடியார் , திருக்குறள்
  • தமிழுக்கு கதி = கம்பராமாயணம், திருக்குறள்
  • முப்பெரும் நூல்கள் = திருக்குறள்,  நாலடியார், பழமொழி நானூறு
  • பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்

மொழிபெயர்ப்பு

  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: இஃது உலகில்‌ 107 மொழிகளில்‌ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • ஆங்கிலத்தில் முதன் முதலாக மொழிப்பெயர்த்தவர் = ஜீ.யு.போப் (1886)
  • ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்கபோலி மொழிக்கு மொழிபெயர்த்தவர் = கிட்டு சின்னமணி
  • இலத்தீன்‌ – விரமாமுனிவர்‌ (அறம்‌, பொருள்‌ மட்டும்‌).
  • ஆங்கிலம்‌ – ஜி.யு. போய்‌ (1886)
  • ஜெர்மன்‌ – கிரெளல்‌
  • ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழர்கள் – உ. வே. சு. ஐயர், இராஜாஜி
  • பிரெஞ்சு – ஏரியல்
  • வடமொழி – அப்பாதீட்சிதர்
  • தெலுங்கு – வைத்தியநாத பிள்ளை
  • இந்தி – பி.டி.ஜெயின்
  • திருக்குறள் கருத்தை 1994ஆம் ஆண்டு முதன்முறையாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர் கிண்டெர்ஸ்லே
வேறுபெயர்கள்
  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: உலக பொது நூல்
  • அறவிலக்கியம்
  • தமிழர் திருமறை
  • முப்பால்
  • பொய்யாமொழி
  • வாயுறைவாழ்த்து
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • திருவள்ளுவம்
  • தமிழ்மறை
  • திருவள்ளுவ பயன் (நச்சினார்க்கினியர்)
  • பொருளுரை (மணிமேகலை)
  • முதுமொழி தமிழ் மாதின் இனிய உயர்நிலை (கவிமணி)
  • நீதி இலக்கியத்தின் நந்தாவிளக்கு
  • உலகப் பொதுமறை
  • பொதுமறை
  • முதுமொழி
உரையாசிரியர்கள்
  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: மணக்குடவர்
  • பரிமேலழகர்
  • பரிப்பெருமாள்
  • திருமலையர்
  • மல்லர்
  • தருமர்
  • காளிங்கர்
  • தாமத்தர்
  • பரிதி
  • நச்சர்
  • இவர்கள் திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மர் ஆவர்
  • சிறந்த உரை பரிமேலழகர் உடையது
  • முதன் முதலில் உரையிட்டவர் = மணக்குடவர்
  • முதன் முதலில் அச்சிட்டவர் = தஞ்சை ஞானப்பிரகாசர் (1812)
  • உரை எழுதியவர்கள் காலத்தால் முந்தியவர் à தருமர்
  • காலத்தால் பிந்தியவர் = பரிமேலழகர்
  • திருக்குறளுக்கு சிறந்த உரை எழுதியவர் பரிமேலழகர் (மேலும் பலர் எழுதியுள்ளனர்)
  • மு.வ, நாமக்கல் கவிஞர், புலவர் குழந்தை ஆகியோரும் உரை எழுதியுள்ளனர்
  • பரிமேலழகர் உரையுடன் முதல் முதலில் திருக்குறள் வெளியிட்டவர் = ராமானுஜ கவிராயர்
  • திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர்
  • தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற்கு எல்லையுரை செய்தார் இவர்கள் என்பது பழம்பாடல்

சிறப்புகள்

  • திருக்குறள் பற்றிய முழுமையான குறிப்புகள் / THIRUKKURAL IN TAMIL: திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது
  • பதினெண்கீழ்கணக்கு நூல்களில் இதுவே மிக பெரியது, அதிக பாடல்கள் கொண்டது
  • மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறநூல் திருக்குறள்
  • அரங்கேற்றப்பட்ட இடம் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்
  • திருக்குறளில் கோடி என்ற சொல் 7 இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது
  • ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் உள்ளது
  • திருக்குறளில் 10 அதிகாரங்களில் பெயர்கள் உடைமை என முடியும்
  • திருவள்ளுவ மாலை என்பது திருக்குறளின் பெருமையை குறித்து சான்றோர்கள் பலர் பாடிய பாக்களின் தொகுப்பு
  • விக்டோரியா மகாராணி காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள்
  • உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
  • இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது
  • திருக்குறளில் அனிச்சமலர் 4 முறையும், யானை 8 முறையும், பாம்பு 3 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது
  • திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள் à குறிப்பறிதல் (பொருட்பால்), குறிப்பறிதல் (காமத்துப்பால்)
  • கொம்பு எழுத்துக்கள் இல்லாமல் 17 குறள்கள் உள்ளன
  • 46 குறள்களில் உயிரினங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன
  • ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து என்ற குறளில் 1, 5, 7 என்ற பகா எண்கள் உள்ளது
  • ஒரே சொல் 5 முறை 5 குறட்பாக்களிலும் ஒரே சொல் நான்கு முறை 22 குறட்பாக்களிலும் ஒரே சொல் 3 முறை 27 குறட்பாக்களிலும் இடம்பெற்றுள்ளது
  • தமிழ், கடவுள் என்ற சொற்கள் இடம் பெறவில்லை
  • ஒரு முறை மட்டும் இடம் பெற்ற எழுத்து = ளீ, ங
  • 50 பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன
  • மொத்த சொற்கள் = 12000
  • மொத்த எழுத்துக்கள் = 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்து 247இல் 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் = அனிச்சம், குவளை
  • திருக்குறளில் இடம் பெற்ற ஒரே பழம் = நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெற்ற ஒரே விதை = குன்றிமணி
  • பயன்படுத்தாத ஒரே உயிரெழுத்து = ஔ
  • இடம்பெற்ற இரு மரங்கள் = பனை, மூங்கில்
  • அதிகம் பயன்படுத்திய எழுத்து = னி (1705)
  • இடம்பெறாத ஒரே எண் 9
  • கோடி என்ற சொல் 7 முறை இடம்பெற்றுள்ளது
  • 26 மொழிகளில் வெளிவந்துள்ளது
  • ஏழுபது கோடி ஒரு முறை வந்துள்ளது
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு – 1812
  • அன்னம், கூகை (ஆந்தை), கொக்கு, காக்கை, புள் (பறவை), மயில், ஆமை, கயல் (மீன்), மீன் (விண்மீன்), முதலை, நத்தம் (சங்கு), பாம்பு, நாகம், என்பிழாது (புழு) ஆகியன இடம் பெற்றுள்ளன.
  • தமிழகத்தில் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுவது எப்போது – தைத்திங்கள் இரண்டாம் நாள்
  • திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் – ஊழியல் (அதிகாரம்: ஊழ்)
  • வழக்கு என்பதன் பொருள் – வாழ்க்கை நெறி
  • என்பு என்பதன் பொருள் – எலும்பு
  • படிறு என்பதன் பொருள் – வஞ்சம்
  • செம்பொருள் என்பதன் பொருள் – மெய்ப்பொருள்
  • ஆர்வலர் என்பதன் பொருள் – அன்புடையவர்
  • துவ்வாமை என்பதன் பொருள் – வறுமை
  • இனிதீன்றல் என்பதனை பிரித்தெழுதுக – இனிது + ஈன்றல்
  • புரை என்பதன் பொருள் – குற்றம்
  • புகழ்பெற்ற தமிழ்மொழி இலக்கியமாகக் குறிப்பிடப்படுவது எது – திருக்குறள்

Related Keywods

Leave a Comment